அரசியல்

“3 மாதங்கள் எதற்கு? 3 மணிநேரம் போதும்!” : பா.ஜ.க.வின் கோரிக்கைக்கு அகிலேஷ் கண்டனம்!

“இடஒதுக்கீட்டை புறக்கணிக்கவே மாநிலத்தில் இருக்கின்ற காலி பணியிடங்களை, நிரப்புவதில் காலம் தாழ்த்தி வருகிறது பா.ஜ.க.”

“3 மாதங்கள் எதற்கு? 3 மணிநேரம் போதும்!” : பா.ஜ.க.வின் கோரிக்கைக்கு அகிலேஷ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை விழுக்காடு உச்சம் தொட்டிருக்க, உத்தரப் பிரதேசத்தின் வேலைவாய்ப்பின்மை விழுக்காடும் முக்கிய காரணமாக விளங்குகிறது.

இந்தியாவின் 4ஆவது பெரிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருந்தாலும், மக்கள் தொகையிலும், மக்கள் நிகராளித்துவத்திலும் (பிரதிநிதித்துவத்திலும்) உத்தரப் பிரதேசத்திற்கே முதலிடம்.

அதன் காரணமாகவே, உத்தரப் பிரதேசத்தில் ஏற்படுகிற பொருளியல் வீழ்ச்சியும், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பும், ஒட்டு மொத்த தேசிய விழுக்காட்டில் எளிதாக மாற்றத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஆட்சியில் அமைத்திருக்கிற பா.ஜ.க, மாநிலத்தில் இருக்கின்ற காலி பணியிடங்களையும், நிரப்புவதில் காலம் தாழ்த்தி வருகிறது. அதற்கு இடஒதுக்கீட்டை புறக்கணிக்கவே, இந்நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன என்ற விமர்சனமும் ஒரு பக்கம் வலுத்து வருகிறது.

அவ்வகையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்விலும், இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தேர்வெழுதியவர்கள் குற்ற்ம் சாட்டினர். அது தொடர்பாக, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த அகலகாபாத் நீதிமன்றம், “ஆசிரியர் தகுதித் தேர்வெழுதியவர்களில் தகுதியடைந்த 69 ஆயிரம் தேர்ச்சியாளர்களின் பெயர்கள் அடங்கிய புதிய தரவரிசைப்பட்டியல், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட வேண்டும்” என மாநில பா.ஜ.க அரசிற்கு உத்தரவிட்டது.

“3 மாதங்கள் எதற்கு? 3 மணிநேரம் போதும்!” : பா.ஜ.க.வின் கோரிக்கைக்கு அகிலேஷ் கண்டனம்!

இதனை அடுத்து, உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு தரப்பில், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட 3 மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், “உத்தரப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதிதேர்வில், தேர்ச்சி பெற்ற 69,000 பேருக்கு, நியமன பட்டியலை உருவாக்க 3 மணிநேரம் போதுமானது. அதனை கணிப்பொறிகளே செய்யும். ஆனால், அதற்கு 3 மாதங்கள் கோரியுள்ளது உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு. தற்போது 3 மாதம் என்று தொடங்கியுள்ள கோரிக்கை, ஆட்சி முடியும் வரை நீடிக்குமா என்ற சந்தேகமும் பா.ஜ.க மீது எழுகிறது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories