அரசியல்

”கீழமை நீதிமன்ற நீதிபதிகளை ஊக்கப்படுத்த வேண்டும்” : சிலந்தி கட்டுரை!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியதுபோல் – விசாரணை நீதிபதிகளை ஊக்கப்படுத்துவீர் என்ற தலைப்பில் முரசொலியில் சிலந்தியின் கட்டுரை வெளிவந்துள்ளது.

”கீழமை நீதிமன்ற நீதிபதிகளை ஊக்கப்படுத்த வேண்டும்” : சிலந்தி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீதிமன்றம் பல விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது' - ‘பராசக்தி'திரைப்படத்தில்கலைஞர் எழுதிய வசனம்போல நீதிமன்றங்கள் சில விசித்திர நிதிபதிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணிடும் அளவு இப்போது சில நிதிபதிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. தங்களுக்கான வரம்பின் எல்லைமீறி சில நீதிபதிகள் கருத்துத் தெரிவிப்பதைக் காணும்போது இத்தகைய எண்ணங்கள் சராசரி மனிதர்களின் நெஞ்சில் துளிர்விடத் தொடங்குகிறது! சட்டப்பாதுகாப்பு வளையத்துக்குள் தாங்கள் இருக்கிறோம் என்ற நினைப்பில் நீதிமன்றத்தினுள்ளே வழக்குக்கு வெளியே சென்று அவர்கள் கூறிடும் கருத்துக்களில் எச்சரிக்கை வேண்டும். அவர்களது நேர்மை, சந்தேகத்திற்கும் விமர்சனத்துக்கும் உட்படாத அளவு அவர்களது வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்திட வேண்டும்!

ஆனால் சமீபகாலமாக நீதித்துறையில் சில நீதிபதிகள் தெரிவித்திடும் கருத்துக்கள், உள்நோக்கம் கொண்டவை என்பதுபோல் சமூக வலைதளங்களில் அவைகள் அலசப்படுகின்றன! ‘ஆதரவு - எதிர்ப்பு' என்ற நிலையில் பரவிடும் - இந்தக் கருத்துக்கள், படிக்கும் மக்கள் மத்தியில் நீதித்துறையில் உள்ள சிலரது செயல்பாடுகள் குறித்து பலவித அய்யங்களை விதைத்திருக்கின்றன! தாங்கள் பாதுகாப்பாக விளையாடுவதாக எண்ணி அந்த நீதிபதிகள் நீதிமன்றத்தில் கூறுபவை, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகும்போது அவர்களது பாதுகாப்பு வளையம் பயனற்றுப் போய் விடுகிறது என்பதை அவர்கள் உணர்ந்தார்களா என்பதும் தெரியவில்லை.

சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆற்றிய உரை ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

"Justice Chandrachud stressed the importance of trusting lower level courts within the hierarchical legal systems. We have to encourage the trial courts to be more receptive to the need for liberty accomadating concerns of people who are seeking liberty."'

‘“நீதிபதி சந்திரசூட், படிநிலை சட்ட அமைப்பில், கீழமை நீதிமன்றங்களை நம்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். (விடுதலையை நாடும்) மக்களின் கவலைகளுக்கு இணங்க வேண்டிய அவசியத்தை விசாரணை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும்படி, நாம் ஊக்குவிக்கவேண்டும்.”

இவ்வாறு கடந்த ஜூலை 28. (2824 ஆம் ஆண்டு) பெங்களூருவில் உள்ள இந்தியப் பல்கலைக் கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி சார்பில் பெர்கிளி மையத்தின் 11-வது ஆண்டு மாநாட்டில் இந்தியாவின் தலைமை நீதிபதி பேசுகிறார்.

“கீழமை கோர்ட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்” என்று பெங்களூருவில் ஜூலை 28-ல் தலைமை நீதிபதி பேசுகிறார்.

ஜாமின் கோரும் வழக்குகளில் பல கீழமை நீதிமன்றங்கள் பாதுகாப்போடு விளையாடுகின்றன என்றும், இந்த வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிகள் பலமான பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு தலைமை நீதிபதி பேசினாலும், இந்த அறிவுரை ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று!

இந்தியாவின் தலைமை நீதிபதியின் கூற்றில் உண்மை இருக்கிறது. பெரும்பாலான கீழமை நீதிமன்றங்கள் ஜாமின் வழக்குகள் மட்டுமின்றி பல வழக்குகளில் ‘நமக்கேன் வம்பு” என்ற நிலைப்பாட்டோடு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டபடி ‘பாதுகாப்போடு விளையாடுகின்றன - சில கீழமை நீதிமன்றங்கள் இப்படிப்பட்ட விளையாட்டை விளையாடும் அளவு அவைகள் தள்ளப்படுகின்றன என்பதையும் இந்தியத் தலைமை நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மீது மறைமுகமாக உள்நோக்கம் கற்பித்திடும் வகையில் உயர் நீதிமன்றத்தின் சில நீதிபதிகள் ‘சுய மோட்டோ' வழக்கு எடுக்கும் போது சில விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

அதனால் மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்ற நிலையில், விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் நிலை உள்ளது. அதுவும் குறிப்பாக அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளில் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள், பலர் இந்த இக்கட்டான அனுபவங்களைப் பெறுகின்றனர்.

ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது முந்தைய ஆட்சியாளர் மீது புனையப் படும் பல வழக்குகள் அரசியல் நோக்கோடு போடப்படுகின்றன. தெளிவான ஆதாரங்களோடு போடப்படும் வழக்குகளும் உண்டு! மிரட்டிடும் வகையில் வழக்குகளைப் போட்டுவிட்டு பின்னர் அதற்கான ஆதாரங்களைத் தேடுவதும்,சிறாஷ்டிப்பதுமான வழக்குகளும் உண்டு,குறிப்பாக 2ஜி வழக்கினை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஓ.பி.சைனி ஏழு ஆண்டுகளாக அந்த வழக்கை விசாரித்தார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தார்! அந்த வழக்கின் தீர்ப்பில் அவர் கூறிய கருத்து மிகவும் கவனிக்க வேண்டியது!

’கடந்த ஏழு ஆண்டுகளாக கோடை விடுமுறை காலம் உட்பட எல்லா அலுவலக நாட்களிலும் நீதிமன்றத்தில் காலை 18 மணி முதல் மாலை 5 மணி வரை, ஏற்கக் கூடிய தக்க சான்றுகளுடன் எவராவது வருவார்களா? எனக் காத்திருந்தேன். என் காத்திருப்பு வீணாய்ப் போயிற்று!”

- என்று நீதிபதி சைனி தனது தீர்ப்பை எழுதும் போது குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது! நீதிபதி சைனிக்கு ஏற்பட்ட நிலைதான் இன்று பல அரசியல் ரீதியான வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் சந்தித்து, தங்களது முடிவுகளை அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது.

”கீழமை நீதிமன்ற நீதிபதிகளை ஊக்கப்படுத்த வேண்டும்” : சிலந்தி கட்டுரை!

முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீது முந்தைய ஆட்சியினர் காலத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் முடிந்தபின் போலீசார் தாக்கல் செய்த கூடுதல் அறிக்கையின் அடிப்படையில் இரண்டு அமைச்சர்களையும் வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

அந்த வழக்கை விசாரித்து சிறப்பு நீதிமன்றம்! இந்த வழக்கு 2812ஆம் ஆண்டு தொடரப்பட்டது. முடித்துவைக்கப்பட்டது 2024--ல். வழக்கு தொடுக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில்! அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 9 ஆண்டுகாலம் இந்த வழக்கு நடந்துள்ளது.

இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது செல்லாது என்றும் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து (Suo motto) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுத்த இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்க- ளையும் கேட்டு தீர்ப்பைத் தள்ளிவைத்த நீதிபதி, கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி அந்த வழக்கின் தீர்ப்பைக் கூறியுள்ளார். அதில் 2022-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும், 2023 ஆம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசையும் மற்றும் பிறரையும் விடுவித்து திருவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்வதாகக் குறிப்பிட்டு இவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித் துள்ளார்!

இந்தத் தீர்ப்பு குறித்து நாம் விவாதிக்க விரும்பவில்லை! இதுபோன்ற 'சுயமோட்டோ’ - வழக்குகளை எடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தாலேயே பாராட்டப்பெற்றவர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! ஆனால் இந்த முடிவை அதாவது சிறப்பு நீதிமன்றம் விசாரித்து எடுத்த முடிவை ரத்து செய்து மீண்டும் அந்த வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ப- தற்கு அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சில நெருடல்களை உருவாக்குவதாக இருப்பதை மறுக்க இயலாது!

“இந்த வழக்கில் அரசியல்வாதிகளின் கை பொம்மையாக லஞ்ச ஒழிப்புப் போலிசார் செயல்பட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தபின் அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப போலிசார் செயல்பட்டுள்ள னர் என்றும், மேல்விசாரணை என்ற பெயரில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் அவர்களைக் காப்பாற்றும் விதமாக

விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். இதுபோன்ற செயல் தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. குற்றம்சாட்டப்பட்ட வர்களும் போலிசாரும் கூட்டு சேர்ந்து நீதிபரிபாலனத்தை கையகப்படுத்திவிடாத அளவு விசாரணை நீதிமன்றங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்” - என்று குறிப்பிட்டுள்ளார்!

இவ்வழக்கு தொடர்பாக ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், வழக்குகளின் கடைசி கால கட்டத்தை - அதாவது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமைச்சர்களான பின் உள்ள ஒரிரு வருடங்களை மட்டும் கணக்கில் எடுத்து கருத்துத் தெரிவித்துள்ளாரோ என கருதிட வேண்டியுள்ளது. இந்த வழக்குகள் விசாரணையில் இருந்த ஏறத்தாழ 9 ஆண்டு காலங்கள் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அமைச்சராக இல்லை. வழக்கை நடத்திய லஞ்ச வழிப்புப் போலீசாரும் வழக்கைத் தொடுக்கக் காரணமாயிருந்த அ.தி.மு.க. அரசின் கீழ் பணியாற்றி வந்திருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் நீதிபதி சந்தேகித்தவாறு குற்றம் சாட்டப்பட்டவர்களும் - போலீசாராம் கூட்டுசேர்ந்து நிதிபரி பாலனத்தை கையகப்படுத்தி இருக்க வாய்ப்பில்லை என்பதையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்று எழும் எண்ணமும் புறந்தள்ளமுடியாதது! விசாரணை நீதிமன்றங்களின் விழிப்புணர்வு சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி எல்லாருக்கும் சரி சமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கு இரு வேறுபட்ட தட்ப - வெட்ப காலகட்டங்களில் நடந்த நிலையில் கையாளப்பட்டுள்ளது போன்ற கருத்து எழுவதையும் யாரும் உதாசீனப்படுத்திட இயலாது!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளபடி நீதிபதிகளின் விழிப்புணர்வு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அந்த விழிப்புணர்வு விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமல்ல; உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தேவை என்பதை எல்லா நீதியரசர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதில் யாருக்குமே எப்போதுமே கருத்து வேறுபாடு கிடையாது.

விசாரணை நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லோருமே சட்டத்தைப் படித்து தேர்ந்த பின்தான் நீதிபதிகளாகின்றனர். ‘சட்டத்தின் ஆட்சி' என்பது-- நீதிபதி குறிப்பிட்டது போல கசாப்புக் கடைக்காரர், ரொட்டி சுடுபவர், மெழுகுவர்த்தி செய்பவர் உள்ளிட்டோரும் அமைச்சர்களும் ஏன் நீதிபதிகளும், நீதி- மன்றங்களின் முன் சரி சமமானவர்களே!

கீழமை கோர்ட் நீதிபதிகளுக்கான தர்மசங்கடங்களை பல நேரங்களில் மேல்நிலை கோர்ட் நீதிபதிகள் உணர்ந்து செயல்படாமல் அவர்கள் எடுத்த முடிவுகளுக்கு சந்தேகச் சாயம் பூச முற்படும்போது நமது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டது போல, விசாரணை நீதிபதி கள் பாதுகாப்பாக விளையாடும் நிலை உருவாகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் தலைமை நீதிபதி கூறியது போல கீழமை நீதிமன்ற நீதிபதிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

banner

Related Stories

Related Stories