பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் நிச்சயம் தங்கம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர், 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டதாக விமர்சனம் எழுந்தது.மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கூட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் வினேஷ் போகத் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
ஆனால் ஒன்றிய அரசு, நாங்கள் முயற்சி செய்தோம் என்று அலட்சியமாக பதில் கூறியது. மேலும் வெள்ளி பதக்கத்திற்காவது போராடி இருக்க வேண்டும், னேஷ் போகத் ஆதராவ ஒன்றிய அரசு இருந்திருக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், வினேஷ்போகத் எடை விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி உஷா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பி.டி உஷா கருத்துக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய், "வினேஷ் போகத்தின் எடை விஷயத்திலிருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் தன் பொறுப்பை துறந்திருக்கிறது. வினேஷ் போகத்தின் எடை பிரச்சினைக்கான விசாரணை, ஒலிம்பிக் மன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, சங்கம் இப்படி செய்திருப்பது கேவலமான செயல். வீரர்கள் பதக்கங்களை வெல்லும்போது மட்டும் உரிமை கொண்டாட ஓடி வரும் ஒலிம்பிக் சங்கம், முக்கியமான நேரத்தில் விலகிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? கேள்வி எழுப்பியுள்ளார்.