அரசியல்

"கடமையை ஆற்றவில்லை, ஆளுநர்களை கட்சி அரசியலுக்கு அப்பால் வைக்க வேண்டும்" - உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து !

சில ஆளுநர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையை செய்யாமல் செயலற்றவர்களாக இருக்கிறார்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார்.

"கடமையை ஆற்றவில்லை, ஆளுநர்களை கட்சி அரசியலுக்கு அப்பால் வைக்க வேண்டும்" - உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.

ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் அவர்கள் பாஜக கட்சி உறுப்பினர்கள் போல செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநர் பதவியையே ஒழிக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய காலகட்டத்தில் சில ஆளுநர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையை செய்யாமல் செயலற்றவர்களாக இருக்கிறார்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற தேசிய சட்ட பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கலந்து கொண்டார்.

"கடமையை ஆற்றவில்லை, ஆளுநர்களை கட்சி அரசியலுக்கு அப்பால் வைக்க வேண்டும்" - உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து !

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "இன்றைய காலகட்டத்தில் சில ஆளுநர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையை செய்யாமல் செயலற்றவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் செய்யக்கூடாத செயல்களை செய்து வருகின்றனர். இதனால், ஆளுநர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாகிறது. இது கவலை அளிக்கிறது. ஆளுநரை அரசியலமைப்பில் உட்படுத்தியதற்கு சில காரணங்கள் உள்ளன. ஆளுநர் பதவி நல்லிணக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கும் என்று நினைத்ததால் அரசியல் அமைப்பில் ஆளுநர் பதவி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆளுநர் தமது கடமைகளை உணர்ந்து செயல்பட்டால் முரண்பட்ட மக்களிடையே ஒருவித புரிதலையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். இந்த நோக்கத்திற்காக மட்டுமே ஆளுநர் பதவி அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டது. ஆளுநரை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு வைக்க வேண்டும், கட்சி விவகாரங்களுக்கு ஆளுநரை பயன்படுத்தக் கூடாது என்பதே அரசியல் சபையில் முக்கிய ஆலோசனையாக இருந்தது.

இந்திய அரசியலமைப்பு வாதத்தை பலப்படுத்த, அரசியல் சாசன முகவுரையில் குறிப்பிட்டுள்ள கூட்டாட்சி, சகோதரத்துவம், அடிப்படை உரிமைகள், கொள்கை ரீதியான நிர்வாகம் ஆகிய நான்கையும் வலியுறுத்த வேண்டும். மாநிலங்களை திறனற்றவை என்றோ, கீழ் படிந்ததாகவோ கருதக்கூடாது. அரசியலமைப்பின் படி ஆட்சி என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். ஒருசார்பான, அற்பத்தனமானதாக இருக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories