அரசியல்

திமுகவின் சட்டப்போராட்டத்தால் பலன்பெற்ற 15,066 OBC மாணவர்கள் : திமுக MP வில்சன் பெருமிதம் !

திமுகவின் சட்டப்போராட்டத்தால் 15,066 OBC மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாக திமுக எம்.பி வில்சன் கூறியுள்ளார்.

திமுகவின் சட்டப்போராட்டத்தால் பலன்பெற்ற 15,066 OBC மாணவர்கள் : திமுக MP வில்சன் பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இதனை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் தி.மு.கதான் உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது.

1993 ஆம் ஆண்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வாதிட்டது.இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கவேண்டும் என அறிவுறுத்தியது.

திமுகவின் சட்டப்போராட்டத்தால் பலன்பெற்ற 15,066 OBC மாணவர்கள் : திமுக MP வில்சன் பெருமிதம் !

அதேநேரத்தில் இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, அதுதொடர்பான விசாரணையின்போது, ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்குவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என ஒன்றிய அரசு பதில் மனு அளித்தது.

இதனால் உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் ஒன்றிய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒன்றிய அரசு பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை இந்தாண்டே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

திமுகவின் சட்டப்போராட்டத்தால் பலன்பெற்ற 15,066 OBC மாணவர்கள் : திமுக MP வில்சன் பெருமிதம் !

இந்த நிலையில், திமுகவின் சட்டப்போராட்டத்தால் 15,066 OBC மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாக திமுக எம்.பி வில்சன் கூறியுள்ளார். இது குறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், " தலைவர் தளபதியார் மு.க.ஸ்டாலின் முயற்சியாலும் அவரின் தொடர் அறிவூறுத்தலின் பேரில் நான் மேற்கொண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு சென்னை நீதிமன்றம் 27.7.2020 அன்று உத்தரவிட்டும் அதனை மதிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று தர நான் வாதாடிய பின்பு நீட் தேர்வை நீதிமன்ற உத்திரவின் மூலம் நிறுத்திய பின்பு அதற்கு பயந்து, பணிந்த மோடி அரசு, வேறு வழியின்றி, ஜூலை 29 2021, அன்று மருத்துவக் கல்விக்கான அனைத்திந்தியத் தொகுப்பிற்கு மாநில அரசுகள் தரும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு தர ஒப்புக்கொண்டது.

உச்சநீதி மன்றதிலும் தலைவர் அறிவூறுத்தலின் பேரில் நான் ஆஜராகி இடஓதுகீடு தந்தது சரியே என வாதிட்டு வெற்றி பெற்றேன். சட்டப்போராட்டத்தின் விளைவாக இந்தியா முழுவதும் உள்ள 5,022 க்கும் மேற்பட்ட பிறபடுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வி எனும் பெருங்கனவு ஆண்டுதோறும் நிறைவேறி வருகிறது. ஆண்டுதோறும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு வரை சுமார் 15,066 இடங்களை மருத்துவ படிப்பில் இந்த வழக்கின் மூலமாக இதர பிறபடுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெற்று தந்திருக்கிறாம். சமூகநீதியில் மகத்தான வெற்றி பெற்ற மூன்றாவது ஆண்டில் இன்று நாம் நுழைகிறோம். வெற்றித் திருநாள் இன்று. இருளை நீக்கிய நன்னாள் இன்று"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories