அரசியல்

”திருப்தியளிக்காத பட்ஜெட்” : ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சித்த ஹர்பஜன் சிங்!

ஒன்றிய பட்ஜெட்டை ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

”திருப்தியளிக்காத பட்ஜெட்” : ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சித்த ஹர்பஜன் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் மைனாரிட்டி பாஜக ஆட்சியை தக்கவைக்க உதவிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களின் சிறப்பு திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பிற மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் MP ஒன்றிய பட்ஜெட்டை விமர்சித்துள்ளார். இது குறித்து பேட்டி கொடுத்துள்ள ஹர்பஜன் சிங், "அமிர்தசரஸ் விமான நிலையத்தை விரிவுபடுத்துவது குறித்து கடந்த மூன்று நாட்களாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் நோட்டீஸ் சமர்ப்பித்தேன்.ஆனால் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஒன்றிய பட்ஜெட் திருப்திகரமாக இல்லை. இந்த பட்ஜெட்டில் ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories