அரசியல்

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தை எங்கள் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள் - காங்கிரஸ் அறிவிப்பு !

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்களும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தை எங்கள் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள் - காங்கிரஸ் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் மைனாரிட்டி பாஜக ஆட்சியை தக்கவைக்க உதவிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களின் சிறப்பு திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பிற மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட்டில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதாக அறிவித்த நிதியை விடுவிப்பதாக கூட எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தை எங்கள் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள் - காங்கிரஸ் அறிவிப்பு !

இதன் காரணமாக ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது இந்திய அளவில் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து பட்ஜெட்டில் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்களும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories