அரசியல்

மாநிலங்களவையில் பெரும்பான்மை இழந்த பா.ஜ.க.வும், NDA-ம்! : சர்வாதிகாரத்திலிருந்து பெறப்பட்ட விடுதலை!

மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் தேவை என்கிற நிலையில், 110 உறுப்பினர்களுடன் பின்னடைவை சந்தித்தது NDA.

மாநிலங்களவையில் பெரும்பான்மை இழந்த பா.ஜ.க.வும், NDA-ம்! : சர்வாதிகாரத்திலிருந்து பெறப்பட்ட விடுதலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2014, 2019 தேர்தல்களில் மக்களவையில் பெற்ற பெரும்பான்மையை, 2024 தேர்தலில் பா.ஜ.க இழந்த காரணத்தால், அதுவரை “பா.ஜ.க கூட்டணி,” “மோடி ஆட்சி” என பொதுவாக அழைக்கப்பட்டு வந்த உச்சரிப்பு, அரசியல் வட்டாரத்திலும், மக்கள் வட்டாரத்திலும் நீங்கி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)” என்று உச்சரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களவையிலாவது கூட்டணி உதவியால் பெரும்பான்மை உள்ளது என்ற மனநிறைவை, மாநிலங்களவையில் இழந்துள்ளது பா.ஜ.க.

கடந்த மார்ச் மாதமே, பெரும்பான்மை விளிம்பில் தொங்கி கொண்டிருந்த பா.ஜ.க, தற்போது விளிம்பிலிருந்தும் மேலும் கீழிறங்கி மாநிலங்களவையில் வெறும் 86 உறுப்பினர்களையே பெற்றுள்ளது.

இதனால், பா.ஜ.க மட்டுமல்ல, பா.ஜ.க சார்ந்திருக்கும் தே.ஜ.கூட்டணியும் (NDA) பெரும்பான்மை இழந்ததோடு மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் தன்னிச்சையாக மசோதா நிறைவேற்றும் முறைக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பெரும்பான்மை இழந்த பா.ஜ.க.வும், NDA-ம்! : சர்வாதிகாரத்திலிருந்து பெறப்பட்ட விடுதலை!

அதன்படி, தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் நிலவரம்,

இந்தியா கூட்டணி - 87

பா.ஜ.க - 86

இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - 29

பா.ஜ.க அல்லாத தே.ஜ.கூ (NDA) - 24

காலி இடங்கள் - 19

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் - 114

மொத்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை - 245 -ஆக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories