அரசியல்

ஆஸ்திரியாவா? ஆஸ்திரேலியாவா? - வெளிநாட்டுக்கு சென்று அந்த நாட்டின் பெயரை தவறாக சொன்ன மோடி... வீடியோ வைரல்!

ஆஸ்திரியாவா? ஆஸ்திரேலியாவா? - வெளிநாட்டுக்கு சென்று அந்த நாட்டின் பெயரை தவறாக சொன்ன மோடி... வீடியோ வைரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடங்கிய நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த போரினை பல்வேறு நாடுகள் கண்டித்து வரும் சூழலில் இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ரஷ்யா சென்ற மோடி, அந்நாட்டின் அதிபர் புதினுடன் கலந்து பேசி, இரு நாட்டு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவையை கலந்தாலோசித்தார். ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்ற பிறகு, பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்ட பின்னர் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு சென்றார். அங்கு இந்திய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அங்கு தனது உரையில் ஆஸ்திரியா என்பதற்கு பதிலாக ஆஸ்திரேலியா என்று கூறினார். உடனே அங்கிருந்த பார்வையாளர்கள் ஆஸ்திரேலியா இல்லை, ஆஸ்திரியா என்று கூறி மோடியின் தவறை சுற்றிக்காட்டினர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவின் பெயரை மோடி தவறாக குறிப்பிட்டது ஐரோப்பிய ஊடகங்களிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதனை குறிப்பிட்டு ஒரு நாட்டின் பெயர் கூட தெரியாமல்தான் ஒரு பிரதமர் அந்த நாட்டுக்கு சென்றாரா என்று விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories