நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுக்கு பின், 18ஆவது மக்களவையின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, முதலில் G7 மாநாட்டிற்காக இத்தாலி சென்று திரும்பினார்.
அப்போது, அதுவரை பிரதமர் மோடிக்கு கிடைக்கப்பெற்று வந்த வரவேற்பு மறுக்கப்பட்டு சர்ச்சையானது. வழக்கமாக வரவேற்க வானூர்தி நிலையம் வரும் பா.ஜ.க தலைவர்கள் யாருமில்லாமல், பாதுகாப்பு அலுவலர்களே வரவேற்க காத்திருந்தனர்.
இதனால், பிரதமர் மோடியின் முகமும், சற்று வாடிய நிலையில் இருந்தது, இணையத்தில் பெரும் பேச்சுப்பொருளாக இருந்தது. இந்நிலையில், தற்போது மோடி சுற்றுப்பயணமாக ரசியா மற்றும் ஆஸ்திரியா சென்று திரும்பிய நிலையிலும், வரவேற்க எந்த தலைமையும் வருகை தராதது சர்ச்சையாகியுள்ளது.
இதன் வழி, தேர்தல் நேரங்களில் மோடி அலை என முழங்கி வந்த முழக்கங்களில் பகுதி முழக்கமான, “மோடி” என்ற முழக்கம் கூட, தற்போது யாராலும் முன்மொழியப்படாத முழக்கமாக மாறியுள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஷ்ரிநட்டே, “இம்முறையும் பா.ஜ.க தலைவர் நட்டா வருகை தரவில்லையா?” என கேலியாக கேள்வி எழுப்பியுள்ளார்.