அரசியல்

16 பாலங்கள் இடிந்தது, 18 ஆண்டுகால நிதிஷ்குமார் - பா.ஜ.க ஆட்சியின் தோல்வி! : தேஜஸ்வி குற்றச்சாட்டு!

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கட்டியெழுப்பியபாலங்கள், போக்குவரத்து நிலையங்களின் கூரைகள், சாலைகள் இடிந்து விழுந்து சர்ச்சையாகி வரும் நிலையில், பீகாரில் கடந்த 3 வாரங்களில் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

16 பாலங்கள் இடிந்தது, 18 ஆண்டுகால நிதிஷ்குமார் - பா.ஜ.க ஆட்சியின் தோல்வி! : தேஜஸ்வி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுற்ற ஒரு மாதத்தில், தீவிரவாத தாக்குதல்கள், புதிய குற்றவியல் சட்டங்களால் உண்டான குழப்பங்கள், கைதுகள், சரியாக கட்டி முடிக்கப்படாமல் திறக்கப்பட்டதால் சிதைவுற்ற பாலங்கள், சாலைகள், மேற்கூரைகள், வினாத்தாள்கள் கசிவு என எண்ணற்ற சிக்கல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறி வருகின்றன.

அவ்வகையில், பாலங்கள் இடிந்து விழுகிறது என்றாலே, பீகார் தான் நினைவிற்கு வரும் என்ற அளவிற்கு, கடந்த ஜூன் 19 தொடங்கி, கடந்த மூன்று வாரங்களில் சுமார் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

ஒழுங்கான ஒப்பந்ததாரர்களை நியமிக்காததும், திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செயலாக்கத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்படாததுமே இதற்கான காரணங்களாக இருக்கின்றன என எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய நாள் (10.07.24) பீகார் மாநிலத்தில், மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்து, மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த, பீகார் முன்னாள் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி, “பீகார் மாநிலத்தில் கடந்த 3 வாரங்களில் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. அதில் நேற்று (10.07.24) இடிந்த பாலமும் ஒன்று. இது ஊழல் அரசின் தோல்வி மட்டுமல்ல, 18 ஆண்டுகால நிதிஷ் குமார் மற்றும் பா.ஜ.க ஆட்சியின் தோல்வி” என குற்றம்சாட்டியுள்ளார்.

இதை தவிர்த்து, பீகாரில் இராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் கூட்டணி வைத்திருந்த போது, நிதிஷ் குமார் அரசு ஒப்பந்தமிட்டிருந்த ரூ 4,400 கோடி மதிப்புள்ள திட்டங்களை, தற்போது நீக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது பீகாரின் NDA அரசு.

இதனால், பீகார் மக்கள் நிதிஷ்குமார் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியின் மீது கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories