அரசியல்

இன்று கூடுகிறது 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் : நாளை திமுக எம்.பி.களுக்கு பதவிப்பிரமாணம் !

இன்று கூடுகிறது 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் : நாளை திமுக எம்.பி.களுக்கு பதவிப்பிரமாணம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில், இதில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) கூடவுள்ளது.

இதில் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக எம். பி பார்த்ருஹரி மஹ்தாப்க்கு குடியரசுத்தலைவர் 10 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் தற்காலிக சபாநாயகர் எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

இன்று கூடுகிறது 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் : நாளை திமுக எம்.பி.களுக்கு பதவிப்பிரமாணம் !

அதன்படி புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் இன்றும் நாளையும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளனர். பிரதமர் மோடியும், அவருக்கு பிறகு ஒன்றிய அமைச்சர்கள், இணையமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்பார்கள்.

அதன் பிறகு மாநிலங்கள் வாரியாக ஆங்கில எழுத்து வரிசையின் படி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். முதல் நாளான இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். நாளை 264 எம்பிக்கள் பதவியேற்பார்கள். அந்த வகையில் தமிழ்நாடு எம்.பிக்கள் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு மேல் பதவி ஏற்க உள்ளனர்.

banner

Related Stories

Related Stories