தமிழ்நாடு

“நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்” - தீஸ்தா செதல்வாட் புகழாரம்!

“நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்” - தீஸ்தா செதல்வாட் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆசிரியர் அருண் பிரசாத்தின் தொகுப்பு நூலான ‘தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (செப்.20) சென்னை தியாகராய நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்ற அரசியல் செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் தமிழ்நாடு அரசின் சிறந்த செயல்பாடுகளை பாராட்டி மேடையில் பேசியுள்ளார். இதுகுறித்து தீஸ்தா செதல்வாட் ஆங்கிலத்தில் மேடையில் பேசியதாவது, “இந்தியாவில் எந்த முதலமைச்சருக்கும் இல்லாத துணிச்சல் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் உள்ளது. கூட்டாட்சியை 2024 தேர்தலில் வியக்க வைக்கும் வகையில் வெற்றி கண்டுள்ளார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்” - தீஸ்தா செதல்வாட் புகழாரம்!

திராவிட கொள்கையும், சுயமரியாதையும் விட்டு கொடுக்காமல் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியை அடைந்துள்ளது மிகவும் சிறப்பான விசயம். ஒன்றியத்தில் ஜனநாயக விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் வெட்கக்கேடான ஒன்று. மும்மொழி கொள்கை, கன்கரண்ட் லிஸ்ட், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியை தராமல் புறக்கணிப்பு போன்ற தன்னிச்சைக்காக செயல்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து நம் முதலமைச்சர் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார். நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். திராவிட இயக்கமும் தமிழ்நாடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நானும் கூடிய விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்.” என்றார்.

“நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்” - தீஸ்தா செதல்வாட் புகழாரம்!

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரும், விசிக துணை பொதுச் செயலாளருமான ஆளூர் ஷா நவாஸ் பேசியதாவது, “கருத்து பணியில் தொய்வு உள்ளது. களப்பணியை விட கூடுதலாக கருத்து பணியை மேற்கொண்டு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அம்மையார் ஜெயலலிதா 4 ஆண்டுகள் ஓய்வெடுப்பார்; 6 மாதம் வெளியே வந்து பிரசாரம் செய்து வெற்றி பெறுவார். உழைத்தால்தான் தொடர்ந்து இயங்கினால் தான் வெற்றி பெற முடியும்.

தமிழ்நாட்டில் பாஜக தனிமைப்பட்டு கிடக்கிறார்கள். வட நாட்டில் அவர்கள் கை ஓங்கி இருந்தாலும், முதலமைச்சர் இங்கு இணைப்பை சாத்தியப்படுத்தி அகில இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியா கூட்டணி கருத்தியல் ரீதியாக பாஜகவை தோல்வியடைய வைத்துள்ளோம். 2029 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதற்கு முன்பு 2026-ல் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

banner

Related Stories

Related Stories