மத்திய பிரதேசத்தின் தார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தற்போது எம்.பியாக இருப்பவர்தான் சாவித்ரி தாகூர். இவர் தற்போது மோடி அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராகவும் பதிவு வகித்து வருகிறார். இந்த சூழலில் இவர் மத்திய பிரதேசத்தின் அவரது சொந்த தொகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அங்கே ஒன்றிய அரசின் பெண் குழந்தைகளுக்கான திட்டமான 'Beti Bachao, Beti Padhao' (பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) என்ற திட்டத்தை எழுத்துப்பலகையில் எழுதியுள்ளார். அப்போது இந்தியில் எழுதிய ஒன்றிய அமைச்சர், அதனை 'Beti Padao Bachav' என்று தவறாக எழுதினார்.
தற்போது இந்த காணொளி வைரலாகி அவருக்கு எதிராக பல்வேறு கருத்துகள் குவிந்து வருகிறது. ஒன்றிய அமைச்சருக்கு, ஒன்றிய அரசின் திட்டம் கூட சரியாக தெரியவில்லை என்று பலரும் கேலி செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.