அரசியல்

மூன்று தேர்வுகளும் முறைகேடுகளும் : மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

யுஜிசி- நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூன்று தேர்வுகளும் முறைகேடுகளும் : மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது. தற்போது நீட் தேர்வு தகுதி தேர்வு என்று கூறினார்கள். ஆனால் இப்போது நீட் தேர்வு வியாபாரமாக மாறிவிட்டது.

அண்மையில் நடந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துள்ளது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு உள்ளதாக எழுந்த புகார்களை அடுத்து 1563 மாணவர்களுக்கு மறுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நீட் குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் UGC-NET,CUET தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் துணை பேராசிரியர் தகுதிக்கா UGC-NET தேர்வு இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. 11.21 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். அந்தத் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அன்று மாலை தேசிய தேர்வு முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் தேர்வில் பெருமளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறி மறுநாளே தேர்வு திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தும் என்றும் ஒன்றிய அரசு கூறி உள்ளது. ஆனால் எங்கு மோசடி நடைபெற்றது?, எப்படி மோசடி நடைபெற்றது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அதேபோல், மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் நடைபெற்ற CUET தேர்விலும் முறைகேடு புகார் எழுந்தது. CUET தேர்வு மே 15 முதல் 24 வரை ஏழு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 220 மாணவர்களுக்கு கேள்வித்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக அந்ததேர்வு மையத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதேபோன்று இந்தூர், பீகார், கோவா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெற இருந்த தேர்வுகள் பின்னர் 29 ஆம் தேதிக்கு திடீரென. ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று டெல்லி நொய்டா, பரிதாபாத், காசியாபாத், குறுகிராம் ஆகிய இடங்களில் நடைபெற இருந்த தேர்வு முதல் நாள் இரவு திடீரென்று ரத்து செய்யப்பட்டு மே 29 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எதற்காக இந்த தேர்வு மாற்றப்பட்டது என்பது குறித்து இதுவரை தேசிய தேர்வு முகமை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த மையங்களில் மட்டுமே1.52 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இப்படி தேசிய தேர்வு முகமை இந்த ஆண்டு நடத்திய நீட், க்யூட், நெட் ஆகிய மூன்று தேர்வுகளிலும் பல குளறுபடிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories