அரசியல்

நாட்டு சிக்கல்கள் குறித்து மோடிக்கு கவலை உண்டா? : மீண்டும் மக்களை புறக்கணிக்க தொடங்கிய மோடி!

2014, 2019 களில் சந்தித்த அதே ஏமாற்றம், 2024 தேர்தலுக்கு பின்னும் அரங்கேறியுள்ளது.

நாட்டு சிக்கல்கள் குறித்து மோடிக்கு கவலை உண்டா? : மீண்டும் மக்களை புறக்கணிக்க தொடங்கிய மோடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2014 ஆம் ஆண்டு, பா.ஜ.க ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது முதல், நாட்டில் எவ்வகை சிக்கல்கள் எழுந்தாலும், அல்லது பா.ஜ.க.வினரால் சிக்கல்கள் உருவாக்கப்பட்டாலும், அதில் மோடியின் பங்கு மறைமுக ஆதரவே. அதாவது அமைதி காப்பதே.

மணிப்பூரில் பெண்களும், குழந்தைகளையும் கொன்று குவிக்கப்பட்ட போதும், பல்லாயிரக் கணக்கான மக்களின் வீடுகள் சூரையாடப்பட்ட போதும்,

நாடு முழுக்க சிறுபான்மையினர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட போதும், அப்பாவி மக்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதும், மோடியின் முக்கிய வேலை, அச்சிக்கல்களை புறந்தள்ளுவதாகவே இருந்து வந்தன.

இதனால், பா.ஜ.க.வின் பெரும்பான்மையும், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வீழ்ச்சி கண்டது. இதனால், ஓரிரு நாட்கள் வருத்தத்தில் இருப்பது போல காட்டிக்கொண்ட மோடி, தற்போது மீண்டும் தனது வழக்கமான பழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

நாடே தீவிரவாத தாக்குதல், தொடர்வண்டி விபத்து, நீட் குளறுபடி, அப்பாவி மக்களை வஞ்சிக்கும் குற்றங்கள், 126 நாட்களாக தொடரும் விவசாயப் போராட்டம் என சிதைவுண்டிருக்கும் நேரத்தில்,

அது எவைபற்றியும் கவலை கொள்ளாமல், Melodi அலையில் மிதந்துகொண்டிருக்கிறார் மோடி. அதனோடு ஓகப்பயிற்சிகள் (யோகா பயிற்சிகள்) குறித்த அறிவுறைகள் வேறு.

நாட்டு சிக்கல்கள் குறித்து மோடிக்கு கவலை உண்டா? : மீண்டும் மக்களை புறக்கணிக்க தொடங்கிய மோடி!
நாட்டு சிக்கல்கள் குறித்து மோடிக்கு கவலை உண்டா? : மீண்டும் மக்களை புறக்கணிக்க தொடங்கிய மோடி!
நாட்டு சிக்கல்கள் குறித்து மோடிக்கு கவலை உண்டா? : மீண்டும் மக்களை புறக்கணிக்க தொடங்கிய மோடி!

இதனால், மோடியின் மீதான எதிர்மறை பார்வையை மறைக்க, Godi ஊடகங்கள், “கடவுளை சந்தித்த போப்” விமர்சனத்தை பெரிதாக்கி வருகின்றன.

இது குறித்து, திரிணாமுல் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, “மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 300 கிறிஸ்தவ ஆலையங்களை இடித்து தரைமட்டமாக்கியபோது, மோடி அமைதி காத்தது தான், கிறிஸ்தவ மக்களின் மிகப்பெரிய கவலையே தவிர, “கடவுளை சந்தித்த போப்” என்ற கூற்று அல்ல. அதனை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீட் குளறுபடிகளால் இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, இலட்சக்கணக்கான குடும்பங்கள் அவதிபட்டு வரும் வேளையில், நாள்தோறும் ஓகப்பயிற்சி குறித்த காணொளிகளை இணையத்தில் பகிர்ந்து வரும் மோடிக்கு, மக்கள் துன்பத்தில் சிறிதளவேனும் அக்கறை இருக்கிறதா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories