அரசியல்

முடிந்தது லோக் சபா... வருகிறது சட்டப்பேரவை தேர்தல்... அடுத்தடுத்து ஆட்டம் காணப்போகும் பாஜக !

ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

முடிந்தது லோக் சபா... வருகிறது சட்டப்பேரவை தேர்தல்... அடுத்தடுத்து ஆட்டம் காணப்போகும் பாஜக !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது. .

கூட்டணி கட்சிகளின் உறுதுணையோடு மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராகியுள்ளார். எனினும் நடந்து முடிந்த தேர்தல் பாஜகவுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசத்தில் பெருமளவு பின்தங்கியுள்ளது பாஜக. உத்தர பிரதேசம் தங்கள் கோட்டை என்று மார்தட்டிக்கொள்ளும் பாஜகவுக்கு இந்த தேர்தலின் தோல்வி மூக்கறுப்பை கொடுத்துள்ளது.

முடிந்தது லோக் சபா... வருகிறது சட்டப்பேரவை தேர்தல்... அடுத்தடுத்து ஆட்டம் காணப்போகும் பாஜக !

80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதசத்தில் இந்தியா கூட்டணி 45 இடங்களையும் பாஜக 33 இடங்களையும் பெற்றுள்ளது. பாஜகவினருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் இந்த நிகழ்வு, மக்கள் பாஜக மீது பெரும் அதிருப்தியில் உள்ளதையே காட்டுகிறது. நாடு முழுவதும் மக்களுக்கு இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை முதல் ஒற்றுமை வரை என அனைத்தும் பிடித்திருந்தது.

நாடு முழுவதும் மக்கள் தங்கள் ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளித்து வரும் நிலையிலும், பாஜக தில்லுமுல்லு வேலைகளை செய்து இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. எனினும் மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். இந்த தேர்தலில் பாஜகவின் பின்னடைவு, பாஜக தலைமை மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

முடிந்தது லோக் சபா... வருகிறது சட்டப்பேரவை தேர்தல்... அடுத்தடுத்து ஆட்டம் காணப்போகும் பாஜக !

குறிப்பாக மோடி போட்டியிட்ட வாரணாசியில் வெறும் 1 லட்சம் வாக்கு வித்தியாசங்களிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிராவிலும், பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த சூழலில் அடுத்தடுத்து என 3 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.

ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்ற நிலையில், 3 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு தற்போது அதற்காக அந்தந்த மாநில கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது. இந்த முறையும் பாஜகவை ஆட்டம் காண வைக்கும் வகையில் 3 மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தொடர் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் அக்டோபர் மாதத்துடன் ஆட்சி முடியவுள்ளது. அதே போல் ஜார்க்கண்டில் நவம்பர்-டிசம்பரில் ஆட்சி முடியவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories