அரசியல்

சட்டங்களில் உண்டாகும் ஓட்டைகள் : தொடர்ந்து தப்பிக்கும் பா.ஜ.க.வினர்!

கூட்டணி கட்சிகளையும் குற்ற பின்னணியிலிருந்து காக்கும் பா.ஜ.க, சொந்த கட்சிக்காரர்களை சிறைவாசம் பிடிக்க வைப்பது அரிது.

சட்டங்களில் உண்டாகும் ஓட்டைகள் : தொடர்ந்து தப்பிக்கும் பா.ஜ.க.வினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பாபர் மசூதி இடிப்பில் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானிக்கு, பெரும் துணையாக இருந்தவர்களில், பா.ஜ.க முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரிஜ் பூஷனுக்கு தனி இடம் இருக்கிறது என்பதாலும்,

பா.ஜ.க.விற்காக எதனை செய்யவும் தயங்கமாட்டார் என்பதாலும், குற்றவாளி பாணியில் இருக்கும் பிரிஜ் பூஷன் மீது தேசிய மல்யுத்த வீராங்கனைகள் எண்ணற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும், அவரை சிறை பிடிக்க மறுத்து, விடுதலையாக சுற்ற வழிவகுத்தது தான் பா.ஜ.க.

2014-ல் ஆட்சியை பிடித்த பின், கருப்பு பணங்களை ஒழிப்போம், ஜனநாயகத்திற்கு பாடுபடுவோம் என பொய் பேச்சுகளை விட்டடித்ததையெல்லாம் மறந்த பா.ஜ.க தான், குற்றங்களை நடத்தும் கூடாரமாகவே திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்றாலே பா.ஜ.க.வினரும், அவரது கூட்டணி கட்சியினரும் தான் என்ற அளவு அண்மை அரசியல் மாற்றம் கண்டுள்ளது.

சட்டங்களில் உண்டாகும் ஓட்டைகள் : தொடர்ந்து தப்பிக்கும் பா.ஜ.க.வினர்!

அவ்வகையில், பிரிஜ் பூஷன் வரிசையில், பா.ஜ.க மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவை சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த வழக்கில் கைது செய்ய, பெங்களூர் போக்ஸோ நீதிமன்றம் ஆணை பிறப்பித்த நிலையிலும், அவரை சட்டத்தில் ஓட்டைகளை உருவாக்கி, கைதிலிருந்து மீட்டிருக்கிறது பா.ஜ.க.

இந்த தீர்ப்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்ட ஒழுங்கு மீதம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில்,“சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ய கூடாது” என எடியூரப்பாவிற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நடவடிக்கையால், எத்தகைய குற்றங்களில் ஈடுபட்டாலும், தப்பித்து கொள்வது உறுதி என்ற நிலைப்பாட்டிற்கு பா.ஜ.க.வினர் வரத்தொடங்கியுள்ளனர்.

அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் இடத்தில் மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து திரிணாமுல் எம்.பி. சாகேத் கோகலே, “ஒரு சாதாரண மனிதன் கைது செய்யப்படலாம், ஆட்சியில் இருக்கும் முதல்வர்கள் கைது செய்யப்படலாம். ஆனால், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட கூடாதா? எடியூரப்பாவிற்கு மட்டும் ஏன் விலக்கு?” என கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories