அரசியல்

கூட்டணி கட்சிகளின் வலுவை குறைத்த பா.ஜ.க! : 18ஆவது மக்களவை அமைச்சரவை குறித்த தகவல் வெளியீடு!

தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இரண்டாம் நிலை துறைகள்.

கூட்டணி கட்சிகளின் வலுவை குறைத்த பா.ஜ.க! : 18ஆவது மக்களவை அமைச்சரவை குறித்த தகவல் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

18ஆவது மக்களவை தேர்தல் முடிவடைந்து, NDA கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பெரும்பான்மை நிரூபித்து,

மோடி பிரதமராக பதவியேற்று சுமார் 24 மணிநேரங்களுக்கு பின், ஒன்றிய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கிடப்பட்டுள்ளன.

மோடியுடன் சேர்த்து 30 ஒன்றிய கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் மற்றும் 6 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) ஆகியோருக்கான துறைகள் பிரித்தளிக்கப்பட்டுள்ளன.

இதில், ஒன்றிய கேபினட் அமைச்சகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான உள்துறை (அமித்ஷா), பாதுகாப்புத்துறை (ராஜ்நாத் சிங்), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை (நிதின் கட்கரி), நிதித்துறை (நிர்மலா சீதாராமன்), வெளியுறவுத்துறை (ஜெய்சங்கர்), வேளாண் துறை (சிவ்ராஜ் சிங் சௌஃகான்), சுகாதாரத்துறை (ஜே.பி.நட்டா), மின்சாரத்துறை (மனோகர் லால் கட்டார்), நீர் வளத்துறை (சி.ஆர். பாட்டில்) உள்ளிட்ட அனைத்து துறைகளும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுக்கே ஒதுக்கிடப்பட்டுள்ளது.

மீதம் இருக்கிற பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்; மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம்; கனரக தொழில்கள் அமைச்சகம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் உள்ளிட்ட துறைகளே கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முன்னாள் ஒன்றிய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, 1.5 இலட்சம் வாக்கு வித்தியாசத்திலும்,

கூட்டணி கட்சிகளின் வலுவை குறைத்த பா.ஜ.க! : 18ஆவது மக்களவை அமைச்சரவை குறித்த தகவல் வெளியீடு!

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவிவகித்த ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம், 1.67 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் படுதோல்வியடைந்த நிலையில்,

தற்போது, வேளாண் அமைச்சராக பா.ஜ.க.வின் சிவ்ராஜ் சிங் சௌஃகானும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக பா.ஜ.க.வ்ன் அன்னபூர்ணா தேவியுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவை ஒருபுறம் இருக்க,

வெங்காயம் விலையேறினால் உண்ண வேண்டாம் என உழைக்கும் மக்களை உதாசினப்படுத்திய நிர்மலா சீதாராமனுக்கும்,

சொந்த தொகுதியிலேயே சாலைகளை சரி செய்யவில்லை என தேர்தலின் போது மக்களால் மறியல் செய்யப்பட்ட நிதின் கட்கரிக்கும்,

ரயில்வே துறையில், பல்வேறு விபத்துகள், பராமரிப்பில் ஏளனம், ரிசர்வ் இருக்கைகளில் ரிசர்வ் செய்யாத பயணிகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அஷ்வினி வைஷ்னவிற்கும்,

கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட அதே துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், கூட்டணி கட்சிகளும் தங்களது அதிருப்திகளை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories