நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதோடு சில மாநில சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுகான பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது.
அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, அங்கு அமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் நோக்கில் இந்த மாநிலத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த தேர்தல் நடக்கிறது.பாரம்பரியமிக்க இந்த மாநிலத்தை ஒரு தமிழர் ஆளலாமா மாநில அரசை ஒரு தமிழர் வழிநடத்தலாமா? என்று கூறினார்.
பின்னர் அங்கு பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி அதற்கு மேல் சென்று "பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது" என்று பேசினார். இதன்மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே வெறுப்பை விதைக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று ஒடிசா பிரச்சாரத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, "ஒடிசா மக்கள் மீது தமிழ் முதல்வரை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இங்கு ஒரு தமிழரை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். ஒடிசாவின் பெருமைக்கான தேர்தல் இது. ஒரு தமிழர் திரை மறைவிலிருந்து அரசை வழிநடத்த நீங்கள் அனுமதிக்கப்போகிறீர்களா ? "என்று கூறியுள்ளார்.
பாஜகவை சேர்ந்தவர்கள் இவ்வாறு விமர்சிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐ.ஏ.எஸ் முடித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளராக பணிபுரிந்தார். ஒடிசா அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு வி.கே.பாண்டியன் பின்னணியாக இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஒடிசாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒடிசாவிலேயே வசித்து வரும் வி.கே.பாண்டியன் விதமாக பாஜகவை சேர்ந்தவர்கள் தமிழர்கள் மீதான தங்கள் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.