அரசியல்

அதானியுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க. செய்த மற்றொரு மோசடி அம்பலம்!

2014-இல் அ.தி.மு.க ஆட்சியின்போது நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு, பல்வேறு நாடுகள் வழியாக வருவது போல், அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது.

அதானியுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க. செய்த மற்றொரு மோசடி அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அதானியுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால், அதிமுக ஆட்சி காலத்தில் களவாடப்பட்ட ரூ. 6,000 கோடி. மக்களின் உயிர்களும் கேள்விக்குறியான அவலம்.

மோடியின் மிக நெருக்கமான பணக்கார நண்பராக இருக்கும், அதானி செய்த மற்றொரு மோசடி இது.

கடந்த ஆண்டு, அந்நிய முதலீடுகளை பெறுவதில், விதிமுறைகளை மீறியிருக்கிறது அதானி குழுமம் என மோசடியை தோலுரித்துக் காட்டிய Financial Times,

தற்போது, அதானி குழுமத்தின் மற்றொரு மோசடியை தோலுரித்துள்ளது. ஆனால், இம்முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள்.

இந்த மோசடி தொடங்கப்பட்டதும், பா.ஜ.க ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஆண்டான 2014-ல் தான்.

2014ஆம் ஆண்டு சனவரி மாதம், அதானி குழுமம் இந்தோனேசியா நாட்டிடம் இருந்து, 3,500 கலோரிகள்/ கிலோ தரத்தில் உடைய நிலக்கரியை டன் கணக்கில் வாங்கி, அதனை 6,000 கலோரிகள்/ கிலோ தரமுடையது என ஏமாற்றி, 3 மடங்கு அதிக விலைக்கு தமிழ்நாடு மின் வாரியத்திற்கு (TANGEDGO) விற்பனை செய்துள்ளது.

அதானியுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க. செய்த மற்றொரு மோசடி அம்பலம்!

அதாவது, 28 டாலர் மதிப்புள்ள ஒரு டன் நிலக்கரியை, 92 டாலர் மதிப்புடையது என கொள்ளை விலைக்கு விற்றுள்ளது அதானி குழுமம்.

இதனால், பணம் களவாடப்பட்டதை விட, மக்களின் உயிர்களுக்கும் கூடுதல் ஆபத்து விளைவிக்கப்பட்டுள்ளது.

காரணம், நிலக்கரியின் தரம் குறைய, குறைய, எரிப்பதற்கான தேவை அதிகரிக்கும். அதாவது, ஒரு குறிப்பிட்ட அளவு மின் உறுபத்தி செய்ய, 3,500 கலோரிகள்/ கிலோ தரமுடைய நிலக்கரி, 6,000 கலோரிகள்/ கிலோ தரமுடைய நிலக்கரியை விட கூடுதல் நேரம் எரிக்கப்பட வேண்டிய தேவை உருவாகும்.

இதனால், காற்று மாசு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களும் இதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, “தரம் குறைந்த இந்தோனேசிய நிலக்கரியை, அதிக தரம் உள்ளது என கூறி, இந்திய அரசாங்கத்திடம் விற்பனை செய்து மோசடி செய்துள்ளது அதானி குழுமம். இது நாட்டின் சுற்றுச்சூழலையும், மக்களையும் பாதிக்கும்.

எனவே, அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ.யும் என்னுடைய புடவைகள் எத்தனை இருக்கிறது என்று எண்ணுகிற வேலையை விட்டிவிட்டு, ஆக்கப்பூர்வமான விசாரணையை மேற்கொள்ள மோடி உத்தரவிட வேண்டும்” என தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “உழைக்கும் மக்கள், அதிக மின்சாரக் கட்டணம் கட்டும் வகையில்,

தரம் தாழ்ந்த நிலக்கரியை மும்மடங்கு விலையில் மோடியின் நண்பர் அதானி விற்று, பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்திருக்கும் செய்தி வெளிவந்திருக்கிறது.

ED, CBI மற்றும் வருமானவரித் துறை இந்த ஊழலை கண்டுகொள்ளாமல் இருக்க எத்தனை டெம்போக்கள் அனுப்பப்பட்டதென பிரதமர் சொல்வாரா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனையடுத்து, தங்களது அளவில்லாத பணத்தாசைக்காக, மக்களின் வாழ்வியலில் விளையாடும் அதானிக்கும், மோடி அரசிற்கும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories