அரசியல்

8 முறை வாக்களித்த பா.ஜ.க பிரமுகர் மகன் ராஜன் சிங் கைது!

4ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது, 8 முறை வாக்களித்த சிறுவன், பா.ஜ.க பிரமுகரின் மகன் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.

8 முறை வாக்களித்த பா.ஜ.க பிரமுகர் மகன் ராஜன் சிங் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

4ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது, உத்தரப்பிரதேசத்தின் ஃப்ருக்காபாத் தொகுதியில் 8 முறை வாக்களித்த சிறுவன் ராஜன் சிங் கைது.

விசாரணையின் போது ராஜன் சிங் என்கிற சிறுவன், பாஜக பிரமுகரின் மகன் என்பதும், 16 வயது மட்டுமே ஆன சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளது.

வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களின் அடையாள அட்டையை வலுக்கட்டாயமாக வாங்கிச் சென்று அவர்களின் அடையாள அட்டையை காண்பித்தபடி 8 முறை பாஜக வேட்பாளருக்கு வாக்களித்து,

அதனை வீடியோவாக பதிவு செய்து அச்சிறுவன் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளான். இதற்கு வாக்குச்சாவடியில் பணியில் இருந்த போலீசார், அதிகாரிகள் அனைவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

தேர்தலை கேலிக்கூத்தாக்கும் இது போன்ற பல சம்பவங்கள் வடமாநிலங்களில் அதிகமாக அரங்கேறி வருகிறதற்கு அவர்களேஎ வீடியோக்களை வெளியிடுவதால் மட்டுமே தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்கிறது.

இந்த சிறுவன் கைது நடவடிக்கை கூட, தேர்தல் நடைபெற்று 7 நாட்களுக்கு அடுத்து வீடியோ வெளியான பின்பு தான், மறு வாக்குப்பதிவு நடத்துவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இவர் தவிர்த்து, பல இடங்களில் புகார்கள் மட்டுமே எழுந்து வருகின்றனவே தவிர, அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகளும், மக்களும், தங்களது கண்டனங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து வருகின்றனர்.

நேரில் வேடிக்கை பார்த்துக்கொண்டு, தேசிய அளவில் மோசடி அம்பலமானதும் நடவடிக்கை எடுக்கும் வழக்கம், ஜனநாயத்தை சீரழிக்கும் என்றும் கண்டங்கள் வலுத்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories