தேர்தல் 2024

பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !

பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை கள்ள ஓட்டு போடுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், 4 கட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. நாளை (மே 20) 5-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும், மோடியும் இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பி வெறுப்பு பேச்சையும் பேசி வருகின்றனர்.

மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில் பாஜக தனது எல்லைகளை மீறியும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உ.பியில் இளைஞர் ஒருவர், பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்து, அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !

உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதிக்கு 4-ம் கட்ட தேர்தலின்போது (மே 13) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் முகேஷ் ராஜ்புத் போட்டியிடுகிறார். கடந்த 2014, 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இவர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில் ஃபரூக்காபாத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் பாஜக வேட்பாளர் முகேஷுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்துள்ளார். இதனை அவரே வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவில் ஒவ்வொரு முறையும் வாக்கு பட்டனை அழுத்தும்போது, தனது விரலால் அதனை எண்ணிக்கொண்டே வாக்கு இயந்திரத்தில் உள்ள பட்டனை அழுத்துகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது.

பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !

ஏற்கனவே மே 7-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவின்போது குஜராத்தில் பாஜக நிர்வாகியின் மகன் விஜய் பபோர், வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள், மக்களை மிரட்டி தனது கட்டுக்குள் கொண்டு வந்து, பின்னர் அங்கிருந்த மக்களை விரட்டி அவர்களுக்கு பதிலாக பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்டுள்ளார். இதனை அவரே லைவாக வீடியோ வெளியிட்டதையடுத்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அதே நாளில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகி ஒருவர், தனது சிறுவயது மகனை வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று, பாஜகவுக்கு அவரை வாக்களிக்க வைத்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தற்போது இந்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories