10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சிக்கு பின், தனியார்மயமாக்கல், வேலைவாய்ப்பின்மை, வறுமை, இடஒதுக்கீட்டில் பாகுபாடு ஆகியவை அதிகரித்துள்ளதே தவிர,
மோடியால் முன்மொழியப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய அளவில் மட்டுமல்ல, மோடிக்கு கடந்த 10 ஆண்டுகளாக MP பதவி வழங்கி வருகிற வாரணாசிக்கும் அவர் செய்தது என்று சொல்லும் படி எதுவுமில்லை.
அவர் அதிகப்படியாக செய்தது, இன்று (14.05.24) வேட்பாளர் மனு தாக்கல் செய்வதற்கு முன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விட்ட முதலை கண்ணீர் மட்டுமே.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது X தள பக்கத்தில்,
“கடந்த 10 ஆண்டுகளாக வாரணாசிக்கு செய்தது என்ன?
கங்கை நதியை தூய்மை செய்கிறோம் என ரூ. 20,000 கோடி செலவு செய்த நிலையிலும், கங்கை தூய்மையாக இல்லையே ஏன்?
மோடி, தான் தத்தெடுத்த மாநிலங்களை, கைவிட்டது எதற்கு?
வாரணாசியில் மகாத்மா காந்தியின் பெருமையை அழிக்க மோடி திட்டமிடுவது ஏன்?
வாரணாசி துறைமுகம் அதானிக்கு தாரைவார்க்கப்பட்டது எதற்கு?
வாரணாசியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரியும் மோடி, ஒரு பள்ளி அல்லது மருத்துவமனையை கூட திறக்காதது, ஏன்?
வாரணாசியில் 25 பேர், மனித கழிவு நீக்க வேலை செய்ததால் உயிரிழக்க நேர்ந்ததே, ஏன்?” என்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.
எனினும், இவை எதற்கும் விடையளிக்காமல், அலங்காரங்களில் கவனம் செலுத்துவதும், ரோட் ஷோ நடத்துவதும் என முழுநேர வேலைபாட்டில் ஈடுபட்டு வருகிறார் மோடி.