இந்தியாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட பிரதமர்களில் முதலாவதாக விளங்கும் மோடி, தனது மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் முழுக்க, இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசிவிட்டு,
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இஸ்லாமியர்களை எதிர்த்து பேசினால், நான் பிரதமராக இருக்கவே தகுதியற்றவனாகிவிடுவேன் என்றும்,
இஸ்லாமியர்களை ஏன் வஞ்சிக்கிறார்கள் என யாரையோ குறித்து பேசுவது போல், மோடி கேள்வி எழுப்பியதும் சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து, நடிகர் பிரகாஷ் ராஜ், “மோடியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரு நாக்குகளை கொண்டு, இரு விதமாக பேசுபவர் இவர். வாக்களிப்பதற்கு முன் சிந்தித்து வாக்களியுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்” என கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இன்று (14.05.24) தனது வேட்பாளர் மனுவை தாக்கல் செய்த மோடி, மனு தாக்கல் செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கண்ணீர் சிந்துவது போன்று நடந்து கொண்டது மேலும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
காரணம், ஒரு வாரத்திற்கு முன்பு தான், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “வாக்குக்காக, மோடி கண்ணீர் விடவும் தயங்கமாட்டார்” என விமர்சித்திருந்த நிலையில், அது ஒரு வாரத்தில் நிரூபிக்கப்பட்டது என்பது தான்.
இவ்வாறு மக்களின் இரக்கத்தை பெற, மோடியால் தொடர்ந்து அரங்கேற்றப்படும் நாடகம் தோல்வியில் தான் முடியும் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.