அரசியல்

“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !

“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மதிமுக 31-ம் ஆண்டு தொடக்க நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகம் தாயகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றி, தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியது பின்வருமாறு :

"இந்த திராவிட மண்ணில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எந்த பண்புகள் வளர்ந்தனவோ எந்த குணங்கள் வளர்க்கப்பட்டுள்ளனவோ அவற்றை தன்மானத்தோடு சுயமரியாதையோடும் பாதுகாத்து மாபெரும் கோபுரமாக்கி அதனை நினைவூட்டுவதற்காகவே தியாகராயர், நடேசனார், டி எம் நாயர் ஆகியோர் வழியில் தந்தை பெரியாரும் அண்ணாவும் கட்டிக் காத்து வளர்த்து 1944 க்கு பின்னாலே திராவிடர் கழகம் உதயமாகி, 1949 திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாகி அதற்குப் பிறகான காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆண்டுகால தொண்டனாக இருந்த நான் 1994 மே 6ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினோம்.

தொடக்க காலத்தில் மறுமலர்ச்சி திராவிட கழகத்தில் இருந்த பலர் வெற்றி பெறவில்லை என்ற காரணத்தினால் சென்று விட்டார்கள். அவர்களுக்கு நன்றி. அதன் பிறகு என்னோடு இருந்தவர்கள் பல்வேறு இன்னல்களை தாங்கியவர்கள். 7000 கிலோமீட்டர் நான் தமிழகத்தில் நடந்திருக்கிறேன். அது மட்டுமல்ல மத்திய பிரதேசத்தில் ராஜபக்சே வருகை தர உள்ளார் என்றபோது தொண்டர்களுடன் கருப்புக்கொடி காட்டச்சென்று அங்கு கைதாகி தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டோம்.

“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 15 ஆண்டுகாலம் தொடர்ந்து போராடி, நீதிமன்றத்தையும் அணுகி போராடியுள்ளோம். மகாராஷ்டிராவில் இருந்து விரட்டப்பட்ட நியூட்ரினோ திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டு ஏறத்தாழ 200 கோடிகள் செலவழித்து விட்டார்கள். அப்போது நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நானும் அஜ்மல் கானும் அதற்கு தடை ஆணை பெற்றோம்.

பொய்களை சொல்லி வருகிறார் பிரதம அமைச்சர். பொய்கள் சொல்லுவதிலும் அவர் தலைமை அமைச்சர் தான். மேலும் காவிரி பிரச்னைக்கும் நெடுங்காலமாக போராடி வருகிறோம். மேகதாது அணை கட்டுவதிலும் ஒன்றிய அரசு கர்நாடக அரசுக்கு ஒத்துழைக்கிறது தமிழகத்தை வஞ்சிக்கிறது. முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிற திராவிட மாடல் ஆட்சி, எங்களுடைய போராட்டங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு யாரேனும் பிரச்னை கொடுத்தால் அதனை முறித்து விடுகிற கூட்டமாக நாங்கள் அவர்களை காவல் காக்கிற கூட்டமாக, தடுத்து நிறுத்துகிற தடுப்பு அரணாக இருப்போம். பாஜக கூட ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் இரண்டு இடங்களில் தான் வென்றார்கள். மதிமுக சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.

“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !

குடை சின்னம், பம்பரம் சின்னம் மற்றும் தற்பொழுது தீப்பெட்டி சின்னம் என போட்டியிட்டு இருக்கிறோம். வருங்காலத்தில் நிரந்தர சின்னத்தை வசமாக்குவோம். திராவிட முன்னேற்ற கழகம் எங்களை நம்புகிறார்கள் அவர்களோடு உறுதியோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

எனக்கு சங்கடம் வந்தால் தான் சந்தோஷம். இடையூறுகள் இன்னல்கள் துயரங்கள் வரும்பொழுது துள்ளி குதித்து பன்மடங்கு கட்சியில் இயங்குவேன். அதனால்தான் துரோகங்களை வென்று விட்டோம். அதனால்தான் இந்தியாவின் பிரதான கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம் மதிமுகவை இணைத்து செயல்பட்டு வருகிறார்கள். துணை அமைப்பு போல அன்பு காட்டி ஆதரிக்கிறார்கள். நாங்கள் எங்கள் நிலையிலே உறுதியாக இருப்போம் திமுகவிற்கு பக்கபலமாக இருப்போம்.

பிரதமரின் பேச்சு தரங்கெட்டு தறைக்குறைவாக இருக்கிறது. ரோட்டு அடியில் குழாய் சண்டைபொழுது பேசிக் கொள்வார்களே அது போன்ற பேச்சு. வருங்காலங்களிலும் பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சி அமைக்கும்"

banner

Related Stories

Related Stories