அரசியல்

பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !

பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்யும் பாஜகவுக்கு மக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக ஆட்சி செய்த ஆண்டுகளில் மக்கள் விரோத செயல்களில் மட்டுமே பாஜக ஈடுபட்டு வந்தது. இதனை பலரும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல Youtuber துருவ் ரதி என்பவரும் பாஜகவின் வண்டவாளத்தை எல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

அண்மையில் பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பலரும் பாஜகவின் ஊழல் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தி வந்தனர். அதில் துருவ் ரதியும் ஒருவர். இவர் பாஜகவின் ஒட்டுமொத்த தேர்தல் பத்திர ஊழல் குறித்து அம்பலப்படுத்தியிருந்தார். இவரது வீடியோவும் இணையத்தில் பெரும் வைரலானாது. இதைத்தொடர்ந்து மேலும் பாஜக அரசின் கொடுமைகள் குறித்தும் வீடியோ மற்றும் கருத்தை பதிவிட்டு வருகிறார்.

பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !

இதனாலே ஊடகவியலாளர் துருவ் ரதிக்கு என்று தனி Follower-கள் உள்ளனர். இவரது ஒரு வீடியோ பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்ச பார்வையாளர்களை கடந்து வருகிறது. பாஜகவின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டு துருவ் ரதிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தற்போது அமைச்சர் மனோ தங்கராஜும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

“ஐனநாயகத்தின் நான்காம் தூணாக கருதப்படும் ஊடகத்துறை இந்தியாவில் பாஜக வால் மிரட்டப்படுகிறதா? இல்லை தன் ஐனநாயக கடமையிலிருந்து விலகி சார்பு நிலைக்கு சென்று விட்டதா என்ற ஐயம் எழுந்துள்ளது.

1. இந்திய வரலாற்றிலேயே மிக பெரிய ஊழலாலான CAG அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து பேசவில்லை.

2. இந்தியாவின் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்த ரஃபேல் ஊழல் குறித்து பேசவில்லை.

3. இந்திய வங்கிகளை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பெரும் பணக்காரர்களை மோடி தடுக்காதது குறித்தும் அவர்களை மீட்டு வராதது குறித்தும் பேசவில்லை.

4. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பது குறித்து ஊடகங்கள் பேசவில்லை.

5. இந்தியாவிற்கு சொந்தமான 96 லட்சம் ஏக்கர் நிலம் சீனா ஆக்கிரமித்திருப்பது குறித்து ஊடகங்கள் பேசவில்லை.

பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !

6. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மத பிரிவினையை தூண்டும் விதம் பேசும் மோடியின் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஊடகங்கள் பேசவில்லை.

7. அரசுக்கு வருமான வரி செலுத்தாமல் இருக்க, பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் என்ற பெயரில் நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் குறித்து ஊடகங்கள் பேசவில்லை.

8. மோடியின் நண்பர்களின் வளர்ச்சிக்காக இந்தியாவின் இயற்கை வளங்களை அழிக்க சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்தியது குறித்து ஊடகங்கள் பேசவில்லை.

9. நாடு நாடாக சுற்றிய மோடிக்கு மணிப்பூருக்கு செல்ல முடியாதது ஏன், மணிப்பூரில் காவல்துறையின் 3000 ஆயுதங்களை கொள்ளையடித்த கலவரக்காரர்கள் மீதும் குற்ற செயல்கள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஊடகங்கள் பேசவில்லை.

இப்படி எத்தனையோ.

முன்பு பேசிய NDTV அதானியால் கொள்முதல் செய்யப்பட்டதுடன் தன் கடமையை முடித்துக்கொண்டது. Mirror Now ஊடகத்தில் பேசிய FayeDeSousa போன்றோர் வெளியேற்றப்பட்டனர். பல முதன்மை ஊடகதாரர்கள் ஊடகங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், அத்தனை ஊடகங்களும் இணைந்து இந்திய ஜனநாயகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை தனி ஒரு ஆளாக முதுகெலும்புடன் ஆற்றி வரும் துருவ் ரதிக்கு வாழ்த்துகள்!”

banner

Related Stories

Related Stories