நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது.
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் அப்போதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. எனவே 6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து, 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதி வாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக நடந்த வாக்குப்பதிவு சதவிகிதம்.
திருவள்ளூர் - 68.31 சதவிகிதம், வட சென்னை - 60.13 சதவிகிதம், தென் சென்னை - 54.27 சதவிகிதம், மத்திய சென்னை - 53.91 சதவிகிதம், ஸ்ரீபெரும்பு தூர் - 60.21 சதவிகிதம், காஞ்சிபுரம் - 71.55 சதவிகிதம், அரக்கோணம் - 74.08 சதவிகிதம், வேலூர் - 73.42 சதவிகிதம், கிருஷ்ணகிரி - 71.31 சதவிகிதம், தருமபுரி - 81.48 சதவிகிதம், திருவண்ணாமலை - 73.88 சதவிகிதம், ஆரணி - 75.65 சதவிகிதம், விழுப்புரம்- 76.47 சதவிகிதம், கள்ளக்குறிச்சி - 79.25 சதவிகிதம், சேலம்- 78.13 சதவிகிதம், நாமக்கல் - 78.16 சதவிகிதம், ஈரோடு - 70.54 சதவிகிதம், திருப்பூர் - 70.58 சதவிகிதம், நீலகிரி - 70.93 சதவிகிதம், கோவை - 64.81 சதவிகிதம், பொள்ளாச்சி -70.70 சதவிகிதம், திண்டுக்கல் - 70.99 சதவிகிதம், கரூர்- 78.61 சதவிகிதம், திருச்சி -67.45 சதவிகிதம், பெரம்பலூர் - 77.37 சதவிகிதம், கடலூர் - 72.28 சதவிகிதம், சிதம்பரம் - 75.32 சதவிகிதம், மயிலாடுதுறை - 70.06 சதவிகிதம், நாகப்பட்டினம் - 71.55 சதவிகிதம், தஞ்சாவூர்- 69.18 சதவிகிதம், சிவகங்கை - 63.94 சதவிகிதம், மதுரை - 61.92 சதவிகிதம், தேனி - 69.87 சதவிகிதம், விருதுநகர் -70.17 சதவிகிதம், ராமநாதபுரம் -68.18 சதவிகிதம், தூத்துக்குடி - 59.96 சதவிகிதம், தென்காசி - 67.55 சதவிகிதம், திருநெல் வேலி - 64.10 சதவிகிதம்,கன்னியாகுமரி - 65.46 சதவிகிதம்.