அரசியல்

"இந்தியா பொருளாதாரத்தில் கீழே சென்றுகொண்டே இருக்கிறது" - ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் !

நாம் பொருளாதாரத்தில் கீழே சென்றுகொண்டே இருக்கிறோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

"இந்தியா பொருளாதாரத்தில்  கீழே சென்றுகொண்டே இருக்கிறது" - ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, பல்வேறு சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளையில், மோடி அரசு இரண்டு நபர்களின் செல்வங்களை வளர்க்கவே ஆட்சியைச் செய்கிறது. இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. பணக்காரர்களுக்கான ஆட்சி என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர்.

இதில் பணமதிப்பிழப்பு, மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஆட்டோமொபையல், விவசாயத்துறை என அனைத்து துறைகளுமே மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இந்த பின்னடைவினால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் உணவு கிடைக்காமல், மக்கள் பசியால் இறந்துபோகும் அவல நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், நாம் பொருளாதாரத்தில் கீழே சென்றுகொண்டே இருக்கிறோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியா குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ரகுராம் ராஜன், "இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 6% மட்டுமே. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரை இது மிகவும் குறைவு. ஏனெனில் நமது வளர்ச்சி சீனா, கொரியா போன்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே உள்ளது.

"இந்தியா பொருளாதாரத்தில்  கீழே சென்றுகொண்டே இருக்கிறது" - ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் !

அதனால்தான் நான் சொல்கிறேன் நாம் எப்போதெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் இன்னும் கீழே சென்றுகொண்டே இருக்கிறோம்.எப்படி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்கிற கேள்விக்கு முதலில் மக்களுடைய தரத்தை மேம்படுத்த வேண்டும்.

அடுத்ததாக வேலைவாய்ப்புகளின் தன்மையை மாற்ற வேண்டும் என்பதுதான் எனது பதிலாக இருக்கும். ஏனெனில் இந்த இரு வகைகளிலும் ஒரே சமயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நமது பொருளாதாரம் வளர்ச்சியடையும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories