பொதுக்கூட்டங்கள், பேரணி என கருத்தியலை பரப்புகின்ற, முழக்கங்களை முன்மொழிகிற தமிழ்நாட்டில், வெறும் Road Show நடத்தி வாக்கு சேகரிக்கலாம் என திட்டமிட்ட பா.ஜ.க.வின் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க மாயை இருக்கிற ஒரு சில மாநிலங்களில், மோடி வந்தால் கூட்டம் கூடி வழியும் என பா.ஜ.க.வினரால் பரப்பட்டு வந்த செய்திகள் அனைத்தும் காசிற்காக கூடிய கூட்டமே என தமிழ்நாட்டில் நடந்த Road Show-க்களின் வழி அம்பலப்பட்டுள்ளது.
குறிப்பாக, சமூக நீதி நிறைந்த தமிழ்நாட்டின் கோவை மற்றும் சென்னை மாவட்டங்களின் வணிகப்பகுதிகளில் இருக்கின்ற கூட்டத்தை காட்டி கணக்கு காட்டி விடலாம் என்ற எண்ணத்தில் Road Show நடத்திய மோடிக்கு, தமிழக மக்கள் வருகை தர மறுத்து ஏமாற்றத்தையே பரிசாக தந்துள்ளனர்.
எனவே, மோடிக்கே இந்த நிலை என்றால், தான் Road Show நடத்தினால் ஈ, கொசு கூட எட்டிப்பார்க்காது என உணர்ந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டிற்கென அட்டவணைப் படுத்தியிருந்த பல நிகழ்வுகளை நீக்கம் செய்து வருகிறார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீதிக்கட்சி தலைவர்கள் சர் பிட்டி தியாகராயர், W.P.A. சவுந்தரபாண்டியன் ஆகியோர் பெயரில் இருக்கிற தியாகராய நகர், பாண்டி பஜார்; பனகல் அரசர் பெயரில் இருக்கும் பனகல் பூங்கா என்ற திராவிட கோட்டத்தில் உங்கள் ஷோ எடுபடுமா?” என்றும்,
“தியாகராயர் நகர் என்ற திராவிட கோட்டத்தில் மோடியின் Road Show, Flop Show ஆக முடிந்தவுடன், வேலூர் சென்று, தமிழ்நாட்டை வளர்க்க போகிறேன் என இந்தியில் சபதம் ஏற்கிறார் மோடி. திராவிட மாடலில் தமிழ்நாடு ஏற்கனவே வளர்ந்துள்ளது. வளர்ந்துக்கொண்டே தான் இருக்கும். இது மோடி மஸ்தான் வித்தையால் தடுக்க முடியாது.” என்றும் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
ஒன்றியத்தில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி வகித்தாலும், பா.ஜ.க.வின் பித்தலாட்டங்கள், என்றும் திராவிட மண்ணில் எடுபடாது என்பது இந்நிகழ்வுகளின் வழி மீண்டும் ஒருமுறை உரக்க ஒலிக்கப்பட்டுள்ளது.