கடந்த 2019 மக்களவை தேர்தலில், 82 விழுக்காடு வாக்குப் பதிவு செய்து, மற்ற மாநில மக்களுக்கு, ஜனநாயக கடமையாற்றுவதில் முன்னோடியாக விளங்கிய மாநிலம் மணிப்பூர்.
ஆனால், அதற்கான சுவடு கூட தெரியாத அளவில், இன வன்கொடுமைக்கு ஆட்பட்டு, வாக்களிப்பது எதற்கு என்று கேட்கிற அளவிற்கு சென்றுள்ளனர் மணிப்பூர் மாநில சிறுபான்மையினர்.
இந்த நிலையை அடைய, பா.ஜ.க ஆட்சியில் முடுக்கிவிடப்பட்ட இனக்கலவரமே காரணம்.
பெரும்பான்மை சமூகமாக விளங்கும் மொய்தி இனத்தின் ஆதரவால், மொய்தி இனத்தவரை முதல்வராக்கி, அவரது ஆட்சியின் வழி, சிறுபான்மையின மக்களின் ST இட ஒதுக்கீட்டை ஒடுக்க எண்ணிய பா.ஜ.க, எதிர்த்து உரிமை குரல் எழுப்பியர்களின் வீடுகளை தரைமட்டமாக்கி, ஊரை விட்டு ஓட செய்து வருவதே மணிப்பூர் கலவரத்தின் உட்கரு.
இதனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள், தங்களின் உடைமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உணவின்றி, உடுத்த மாற்று துணியின்றி, சரியான மின்சார வசதி, கழிப்பறை வசதி என எவையும் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்களின் செயல்களுக்கு சற்றும் வருத்தம் தெரிவிக்காத பா.ஜ.க அரசு, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, தங்களது பதவியை தக்கவைக்க தேர்தல் வேலைகளில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து, நிவாரண முகாம்களில் வாழும் 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்களில் ஒருவரான நோபி என்ற பெண், “தற்போது ஆட்சி செய்து வரும் பா.ஜ.க, எங்களின் வாழ்வியலுக்கான உரிமையையே பிடுங்கியுள்ளது.
வாக்குரிமையை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய போகிறோம். எங்களின் வாழ்க்கையை சூரையாடியவர்களுக்கு, நாங்கள் ஏன் எங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்” என கேள்விகளுடன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இது போன்ற கருத்துகள், மணிப்பூர் மட்டுமல்லாது நாட்டின் பல இடங்களிலும், ஒலிக்கப்பட்டு வருவது, பா.ஜ.க அரசினால் மக்கள் அடைந்து வரும் துயரத்தையும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சந்திக்க இருக்கும் தோல்வியையும் வெளிச்சமிட்டு காட்டி வருகிறது.