அரசியல்

பா.ஜ.க முன்மொழியும் பெண் வலிமை (Nari Shakti) எங்கே? : காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரிக்க காரணமாக இருப்பவர்களே, தேர்தல் வருவதையொட்டி, பெண்கள் தான் நாட்டின் எதிர்காலம் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆம்! பா.ஜ.க.வினர் தான்.

பா.ஜ.க முன்மொழியும் பெண் வலிமை (Nari Shakti) எங்கே? : காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மதச்சார்பின்மை, சமத்துவமின்மை ஆகியவற்றை முன்னிறுத்தும் வகையில், ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு உள்ளிட்ட எண்ணற்ற உலகளாவிய அமைப்புகள், ஒன்றிய அரசிற்கு தொடர்ச்சியான கண்டனங்களை முன்வைக்கும் நிலையிலும், பா.ஜ.க தனது பாசிச வேலைகளை தடையில்லாமல் செயலாற்றி வருகிறது.

அதன் ஒரு பங்காகவே, நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அதிகரிக்கும் வன்கொடுமைகள் பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில், மோடியும் அவரது அரசும், பெண்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் அரசாக செயல்படுவது போல, தங்களை காட்சிபடுத்திக் கொள்கின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “NCRB தகவலின் படி, கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரட்டிப்பாகியுள்ளன.

பா.ஜ.க முன்மொழியும் பெண் வலிமை (Nari Shakti) எங்கே? : காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!

அதாவது, பா.ஜ.க ஆட்சி காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 35 இலட்சத்தை கடந்துள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, 2017-இல் 2.4 இலட்சமாக இருந்து, 2022-இல் 4.5 இலட்சமாக அதிகரித்துள்ளது.

குஜராத் கலவரத்தில் பில்கி பனோ பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதானவர்கள் விடுதலையாக்கப்பட்டனர். உச்சநீதிமன்றம் தலையீடில்லாமல் இருந்திருந்தால், அவர்கள் இன்றளவும் விடுதலையாகவே சுற்றித்திரிந்திருப்பர்.

ஒன்றிய பட்ஜெட்டிலும், அங்கன்வாடி, ஊட்டச்சத்து திட்டங்கள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தை நலன் அமைப்பு ஆகியவற்றிற்கு 0.55 விழுக்காடு தான் நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கியை நீட்டிக்க ‘பெண் வலிமை’(Nari Sakti) என கூச்சலிட்டு வருகிறது மோடி அரசு” என விமர்சித்துள்ளார்.

பெண்களையும், குழந்தைகளையும் காக்க வேண்டிய அரசின் பிரதிநிதிகளே, குற்றம் இழைப்பவர்களாக இருப்பது, அதிகரிக்கும் அநீதிக்கு சான்றாய் அமைந்துள்ளது.

அதற்கு எடுத்துக்காட்டாகவே, நாடாளுமன்ற உறுப்பினரும், மல்யுத்த வீராங்களைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருமான பிரிஜ் பூஷன் உள்ளிட்ட எண்ணற்ற பா.ஜ.க தலைமை நிர்வாகிகள் ஆகியோர், மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படுகின்றனர்.

இதற்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், பல புதிய சிக்கல்களை உருவாக்கி, இருக்கின்ற சிக்கலை மறக்க செய்து வருகின்ற பா.ஜ.க.

banner

Related Stories

Related Stories