அரசியல்

மோடியின் தேர்தல் பரிசு : தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு : நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

மோடியின் தேர்தல் பரிசு : தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு : நெடுஞ்சாலை ஆணையம்  அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் சாலைகள் 4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்ட பின்னர், அங்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச்சாவடிகளையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

ஆனாலும் ,ஒன்றிய அரசு சுங்க கட்டண தொகையை அதிகரித்தவண்ணம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் சுங்க கட்டணங்களை நேரடியாகப் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துத் துறைக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். ஆனாலும், இந்த வருவாய் போதவில்லை என ஒன்றிய பாஜக அரசு மேலும் மேலும் சுங்கக்கட்டணத்தை அதிகரித்து வருகிறது.

மோடியின் தேர்தல் பரிசு : தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு : நெடுஞ்சாலை ஆணையம்  அறிவிப்பு!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ. 5 முதல் 20 வரை உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories