அரசியல்

அமைதி! அமைதி! அமைதி! : தேசிய சிக்கலோ, அல்லது மாநில சிக்கலோ மோடியின் நிலைப்பாடு அமைதியே!

விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் கலவரம், சிறுபான்மையினர்களுக்கு எதிரான அநீதி, வேலைவாய்ப்பின்மை என எந்த சிக்கல் எழுந்தாலும், வேறு நாட்டவரை போல காட்சிப்படுத்தி கொள்வதில், மோடி வல்லமைக்கு ஈடுயில்லை.

அமைதி! அமைதி! அமைதி! : தேசிய சிக்கலோ, அல்லது மாநில சிக்கலோ மோடியின் நிலைப்பாடு அமைதியே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், வறுமையும் அதிகரிக்கும் போது, “நாட்டில் வறுமை 5%-ஐ விட குறைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன” என கூறும் பிரதமர் மோடியின் எதிர்மறை பேச்சுகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றன.

எதிர்மறை பேச்சுகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கும் வகையில், ஏதேனும் ஒரு சிக்கல் தேசிய அளவிலோ, அல்லது மாநில அளவிலோ எழுந்தால், அது குறித்து எவ்விதத்திலும் கருத்து தெரிவிக்காமல், அமைதி காக்கும் மற்றுமொரு உத்தியையும் கையாண்டு வருகிறார் மோடி.

அவ்வகையில், அண்மையில் நடந்து வரும் குஜராத் சட்டமன்ற கூட்டத்தொடரில், “கடந்த மூன்று ஆண்டுகளாக, மாநிலத்தில் தற்கொலைகள் உச்சத்தை தொட்டுள்ளன. சுமார் 25, 000 பேர் வாழ்வில் நம்பிக்கை இழந்து இம்முடிவை எடுத்துள்ளனர். அதில் சுமார் 500 பேர் மாணவர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் வெளியிட்ட அறிக்கையில், “மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கூட, மக்களை பற்றி கவலைகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார் மோடி. பா.ஜ.க.வின் ஒன்றிய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தவறி வருகின்றன” என விமர்சித்துள்ளார்.

அமைதி! அமைதி! அமைதி! : தேசிய சிக்கலோ, அல்லது மாநில சிக்கலோ மோடியின் நிலைப்பாடு அமைதியே!

இவ்விமர்சனம் இந்தியாவில் எழும் அனைத்து சிக்கல்களுக்கும் பொருந்துவதாய் இருப்பது, மக்களை அதிர்ச்சியூட்டியுள்ளது.

எடுத்துக்காட்டாக, பா.ஜ.க. வின் 10 ஆண்டுகள் ஆட்சியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவாதாரம் வழங்கும் விவசாயிகள், பொருளாதாரத்தில் கடுமையான பின்னடைவுகளை சந்தித்துள்ளனர்.

அதன் காரணமாக, அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்தோடு போராடி வருகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனினும், அச்சிக்கலுக்கு பிரதமர் மோடி தீர்வு காண விரும்பாமல், அவரின் உத்திகளான எதிர்மறை பேச்சுகளையும், அமைதி நிலைப்பாட்டையும் தான் கையில் எடுத்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயக் குழு தலைவர் சர்வான் சிங் பந்தெர், “பா.ஜ.க. அரசின் நோக்கமும், கவலையும் தேர்தலின் மீது மட்டுமே உள்ளது. விவசாயிகளை அவர்கள் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்!” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கும் மோடியின் விடையாக, அவரது உத்திகளே உள்ளன. இவ்வாறு மக்களின் சிக்கல்களை பற்றி சிறிதளவும் எண்ணாத, மோடியும் அவரது கட்சியும், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை பாதி விற்றுவிட்ட நிலையில், மீதியை மீட்டெடுக்க மக்களுக்கு ஒரு வாய்ப்பாக, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories