அரசியல்

ஒன்றும் இல்லாத பட்ஜெட் : ஒன்றிய பாஜக அரசின் இறுதி நிதிநிலை அறிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சிகள் !

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஒன்றும் இல்லாத பட்ஜெட் : ஒன்றிய பாஜக அரசின் இறுதி நிதிநிலை அறிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், ஒன்றிய பாஜக அரசின் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யபடும் இறுதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் என்றாலும் தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஒன்றும் இல்லாத பட்ஜெட் : ஒன்றிய பாஜக அரசின் இறுதி நிதிநிலை அறிக்கையை விமர்சித்த எதிர்க்கட்சிகள் !

வரிச்சலுகைகள், விலைகுறைப்புகள் பற்றி எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வருமான வரி சலுகை, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு போன்ற மக்களுக்கேற்ற எந்த வித அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேலும், பாஜக பட்ஜெட்டில் கடுமையான நிதிப்பற்றாக்குறை இருக்கும் நிலையில், அரசு கூடுதலாக கடன் வாங்கவேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களில் இருந்து பிடுங்கப்படும் நேரடி வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில், அதற்கு ஏற்ப திட்டங்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories