அரசியல்

“பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” - சாவர்க்கர் பாணியில் பின்வாங்கிய பாஜக முதல்வர்!

"பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை" என சமூகவலைதளத்தில் பதிவிட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா பகிரங்க மனிப்பு கேட்டுள்ளார்.

“பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” - சாவர்க்கர் பாணியில் பின்வாங்கிய பாஜக முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் தீண்டாமை, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பலவை அரங்கேறி வருகிறது. இந்தியா முன்னோக்கி செல்கிறது என்று பாஜக அரசு வெளியே சொல்லிக்கொண்டாலும், அவரவர் வீடுகளிலும், ஆளும் மாநிலங்களிலும் பின்னோக்கியே செல்கிறது. படிப்பறிவு, மருத்துவ வசதி என பல விஷயங்களில் விட இந்தியாவில் பல மாநிலங்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.

இதனிடையே ஒன்றியத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மதம், சாதி உள்ளிட்டவையை தூண்டிவிட்டு மக்கள் மத்தியில் மோதலை உண்டாக்கி வருகிறது. குஜராத் கலவரம் முதல் மணிப்பூர் வன்முறை வரை பாஜகவின் பின்புலமே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. மேலும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

“பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” - சாவர்க்கர் பாணியில் பின்வாங்கிய பாஜக முதல்வர்!

சிஏஏ உள்ளிட்ட பல சட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்த துடிக்கும் பாஜக அரசு, சாதிய ரீதியான பிளவையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பாஜக மநுஸ்மிருதி உள்ளிட்டவையை மக்கள் மனதில் மீண்டும் திணிக்கும் முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், கடந்த 26-ம் தேதி அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டார்.

“பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” - சாவர்க்கர் பாணியில் பின்வாங்கிய பாஜக முதல்வர்!

இதுகுறித்து கடந்த 26-ம் தேதி, அவர் வெளியிட்டுள்ள X வலைதள பதிவில், "பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் கடமை" என்று பகவத் கீதை வாயிலாக கிருஷ்ணர் கூறுவது போல் வீடியோவும் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவுக்கு கண்டனங்கள் குவிந்து வந்தது. மேலும் சிபிஐ(எம்), "பாஜகவின் மனுவாதி சித்தாந்தம் புறப்படுகிறது" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

“பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” - சாவர்க்கர் பாணியில் பின்வாங்கிய பாஜக முதல்வர்!

தொடர்ந்து ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், தனது பதிவை சில மணி நேரத்திலேயே நீக்கினார். எனினும், அவர் வெளியிட்டுள்ள பதிவின் ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் வைரலாகி கண்டனங்கள் குவிந்து வரும் நநிலையில், தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வளைதள பதிவில், "எனது சமூக வலைதளங்களில் தினமும் காலையில் பகவத் கீதையின் ஒரு ஸ்லோகத்தைப் பதிவேற்றுவது வழக்கம். இதுவரை 668 ஸ்லோகங்களை பதிவிட்டுள்ளேன். சமீபத்தில் எனது குழு உறுப்பினர் ஒருவர், அத்தியாயம் 18 வது வசனம் 44 ல் இருந்து ஒரு ஸ்லோகத்தை தவறான மொழிபெயர்ப்புடன் பதிவிட்டுள்ளார்.

தவறை கவனித்தவுடன், உடனடியாக பதிவை நீக்கிவிட்டேன். நீக்கப்பட்ட பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் இவரது பதிவு கண்டனங்களை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories