அரசியல்

குறை கண்டுபிடிப்பதில் காட்டும் அக்கறையை ஒன்­றிய அர­சி­டம் நிதி பெறுவதில் பாஜக,அதிமுக காட்டலாம்- முரசொலி!

குறை கண்டுபிடிப்பதில் காட்டும் அக்கறையை ஒன்­றிய அர­சி­டம்  நிதி பெறுவதில் பாஜக,அதிமுக காட்டலாம்- முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (21.12.2023)

முழுத் தொகையையும் முழுமையாக வழங்குக!

மாண்­பு­மிகு இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி அவர்­களை, மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சந்­தித்­துள்­ளார்­கள். புயல் -– மழை -– வெள்­ளம் ஆகி­ய­வற்­றால் ஏற்­பட்ட பாதிப்­பு­களை விளக்கி, இத­னைச் சரி செய்ய ஒன்­றிய அரசு உட­ன­டி­யாக நிவா­ர­ணத் தொகையை வழங்க வேண்­டும் என்று கோரிக்கை வைத்­துள்­ளார்­கள்.

சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் ஆகிய மாவட்­டங்­க­ளும் –- திரு­நெல்­வேலி, கன்­னி­யா­கு­மரி, தூத்­துக்­குடி, தென்­காசி ஆகிய மாவட்­டங்­க­ளும் –- சீர் செய்­யப்­பட வேண்­டிய மாவட்­டங்­க­ளாக உள்­ளன.

பல்­வேறு குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளில் வெள்ள நீர் சூழ்ந்து, வீடு­க­ளுக்­குள் வெள்­ளம் புகுந்­த­தால் பொது­மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பெரி­தும் பாதிப்­பிற்­குள்­ளா­னது. கன­ம­ழை­யின் கார­ண­மாக, சாலை, பாலம், நீர்­நிலை உள்­ளிட்ட பல்­வேறு உட்­கட்­ட­மைப்­பு­க­ளுக்­கும் பெரி­த­ளவு சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

புயல் மழை­யால் சாலை­கள், பாலங்­கள், பள்­ளிக் கட்­ட­டங்­கள், அரசு மருத்­து­வ­ம­னை­கள் போன்ற பொதுக் கட்­ட­மைப்­பு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­க­ளைச் சீர்­செய்­தி­ட­வும், மழை வெள்­ளத்­தால் சேத­ம­டைந்­துள்ள டிரான்ஸ்­பார்­மர்­கள், மின் கம்­பங்­கள், பழு­த­டைந்த துணை மின் நிலை­யங்­கள் உள்­ளிட்ட மின்­சார உட்­கட்­ட­மைப்­பு­க­ளைச் சீர் செய்­தி­ட­வும், பாதிக்­கப்­பட்ட உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் குடி­நீர்த் தொட்­டி­கள், தெரு­வி­ளக்­கு­கள், கிரா­மச் சாலை­கள் ஆகி­ய­வற்­றைச் சீர் செய்­தி­ட­வும் இழப்­பீ­டு­கள் கோரப்­பட்­டுள்­ளது.

புயல் மழை­யால் பாதிக்­கப்­பட்ட மீன­வர்­க­ளின் பட­கு­கள், வலை­கள் ஆகி­ய­ வற்­றிற்கு இழப்­பீ­டு­கள் வழங்­க­வும், சிறு, குறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள இழப்­பு­களை ஈடு­செய்­தி­ட­வும், சாலை­யோர வியா­பா­ரி­கள் மற்­றும் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­குத் தேவை­யான உத­வி­களை வழங்­கி­ட­வும் இந்த நிதி கோரப்­ப­டு­கிறது.குடும்­பங்­க­ளுக்கு வாழ்­வா­தா­ரங்­களை மீட்­கத் தேவை­யான உத­வி­களை வழங்­க­வும் – பல்­வேறு வகை­யான சமூக உட்­கட்­ட­மைப்­பு­களை மீட்­டு­ரு­வாக்­கம் செய்­ய­வும் இந்த நிதி கோரப்­ப­டு­கி­றது.

குறை கண்டுபிடிப்பதில் காட்டும் அக்கறையை ஒன்­றிய அர­சி­டம்  நிதி பெறுவதில் பாஜக,அதிமுக காட்டலாம்- முரசொலி!

வாழ்­வா­தா­ரம் இழந்த மக்­க­ளுக்கு குடும்­பத்­துக்கு 6 ஆயி­ரம் ரூபாய் வழங்­கப்­ப­டும் என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­தார்­கள். கடந்த 17 ஆம் தேதி­யில் இருந்து 6 ஆயி­ரம் கொடுக்­கும் பணி தொடங்கி விட்­டது. ஒன்­றிய அர­சி­டம் இருந்து நிதி வரும் வரை காத்­தி­ருக்­கா­மல் மாநில அரசே நிதி வழங்­க­லைத் தொடங்கி விட்­டது. இதற்கு மட்­டும் 1,486 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்­கீடு செய்­துள்­ளது. இது 24 லட்­சத்து 25 ஆயி­ரம் குடும்­பங்­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கும் வகை­யில் அமைந்­துள்­ளது. இவை போக பல்­வேறு இழப்­பு­க­ளைச் சந்­தித்­த­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் நிதி­யை­யும் முத­ல­மைச்­சர் அவர்­கள் உயர்த்தி இருக்­கி­றார்­கள்.

உயிர் இழந்­த­வர் குடும்­பத்­துக்கு ரூ.5 லட்­சம் –- சேதம் அடைந்த குடி­சை­ க­ளுக்கு ரூ.8 ஆயி­ரம் – -பாதிக்­கப்­பட்ட பயிர்­க­ளுக்கு ஹெக்­டேர் ஒன்­றுக்கு ரூ.17 ஆயி­ரம் - – பல்­லாண்டு பயிர்­கள், மரங்­க­ளுக்கு ஹெக்­டேர் ஒன்­றுக்கு ரூ.22 ஆயி­ரத்து 500 – -மானா­வாரி பயிர்­க­ளுக்கு ஹெக்­டேர் ஒன்­றுக்கு ரூ.8,500 எருது, பசு உயி­ரி­ழந்து இருந்­தால், ரூ.37 ஆயி­ரத்து 500 –- ஆடு உயி­ரி­ழந்து இருந்­தால் 4 ஆயி­ரம் –- கட்­டு­ம­ரங்­கள் முழு­மை­யா­கச் சேதம் அடைந்­தி­ருந்­தால், ரூ.50 ஆயி­ர­மும், பகுதி அளவு சேதம் அடைந்­தி­ருந்­தால் ரூ.15 ஆயி­ர­மும் – - வல்­லம் வகை பட­கு­க­ளுக்கு ஒரு லட்­ச­மும், இயந்­தி­ரப் பட­கு­க­ளுக்­கான இழப்­பீ­டாக ரூ.7.50 லட்­ச­மும், வலை­க­ளுக்கு ரூ.15 ஆயி­ர­மும் – - என இழப்­பீ­டு­களை அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் தர முத­ல­மைச்­சர் அவர்­கள் உத்­த­ர­விட்­டுள்­ளார்­கள். இவை அனைத்­தும் பெரு­ம­ளவு நிதியை உள்­வாங்­கும் அறி­விப்­பு­கள் ஆகும்.

‘மிக்­ஜாம்’ புயல் மழை­யி­னால் சென்னை, செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம் மற்­றும் திரு­வள்­ளூர் மாவட்­டங்­க­ளில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் உள்ள பள்­ளி­வ­ளா­கங்­க­ளைச் சுத்­தம் செய்ய ஒரு கோடியே 90 இலட்­சம் ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. கல்­லூ­ரி­க­ளைச் சுத்­தம் செய்ய ஒரு கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இவை அனைத்­தை­யும் உள்­ள­டக்­கித் தான் நிதி­யைக் கோரி­யுள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் சீர­மைப்பு மற்­றும் நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக தற்­கா­லிக நிவா­ர­ணத்­தொ­கை­யாக 7033 கோடி ரூபா­யும், நிரந்­தர நிவா­ர­ணத்­தொ­கை­யாக 12,659 கோடி­ரூ­பா­யும் முத­ல­மைச்­சர் அவர்­கள் கோரி உள்­ளார்­கள்.

குறை கண்டுபிடிப்பதில் காட்டும் அக்கறையை ஒன்­றிய அர­சி­டம்  நிதி பெறுவதில் பாஜக,அதிமுக காட்டலாம்- முரசொலி!

திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி, தென்­காசி மாவட்­டங்­க­ளில் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் இன்­னும் முழு­மை­யாக அள­வி­டப்­ப­ட­வில்லை. எனவே, அவ­சர நிவா­ரண நிதி­யாக ரூ.2 ஆயி­ரம் கோடி தர­வேண்­டும் என்­றும் முத­ல­மைச்­சர் அவர்­கள் பிர­த­ம­ரி­டம் கோரி­யுள்­ளார்­கள். ஆக மொத்­தம் 21 ஆயி­ரத்து 692 கோடி ரூபாய் தமிழ்­நாடு அர­சால் ஒன்­றிய அர­சி­டம் கேட்­கப்­பட்­டுள்­ளது. இத்­தொ­கையை முழு­மை­யாக ஒன்­றிய அரசு வழங்க வேண்­டும். வழங்­கி­னால்­தான் மக்­க­ளுக்கு நிவா­ர­ணத் தொகை­யை­யும் வழங்க முடி­யும். உள்­கட்­ட­மைப்­பு­க­ளை­யும் சீர்­செய்ய முடி­யும்.

‘‘மிக்­ஜாம் புயல் கன­ம­ழை­யால் சென்னை மற்­றும் சுற்­றுப்­புற மாவட்­டங்­க­ளில் கடந்த 47 ஆண்­டு­க­ளாக இல்­லாத கன­ம­ழை­யால் ஏற்­பட்ட வெள்­ளப் பாதிப்­பை­யும், தென் மாவட்­டங்­க­ளில் தற்­போது வர­லாறு காணாத வகை­யில் 100 ஆண்­டு­கள் இல்­லாத கன­மழை பெய்­த­தால் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளை­யும் கருத்­தில் கொண்டு, தேசி­யப் பேரி­ட­ராக அறி­விக்க வேண்­டும்” என்­றும் மாண்­பு­மிகு இந்­தி­யப் பிர­த­மர் அவர்­க­ளி­டம் மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் கேட்­டுக் கொண்­டுள்­ளார்­கள். இத­னை­யும் ஒன்­றிய அரசு அறி­விக்க வேண்­டும். தமிழ்­நாடு அர­சின் மக்­கள் பணி­க­ளில் குறை கண்­டு­பி­டித்­துக் கொண்­டி­ருக்­கும் அ.தி.மு.க. – பா.ஜ.க. போன்ற கட்­சி­கள், ஒன்­றிய அர­சி­டம் இருந்து நிதி­யைப் பெற்­றுத் தரு­வ­தில் அக்­கறை காட்ட வேண்­டும்.

banner

Related Stories

Related Stories