அரசியல்

“பிரதமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர் !” - மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதிலடி !

“பிரதமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர் !” - மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுகிறது. இதில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தொடர்ந்து மீதமுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து கட்சியினரும் பிரசார பேரணி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தானில் தற்போது தேர்தல் பிரசாரத்தை கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று பிரதமர் மோடி பிரசாரத்தில் பேசுகையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் தான் குற்றங்கள் அதிகரித்து காணப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கன்ஹையா லால் கொலை செய்யப்பட்டதை விமர்சித்தார்.

“பிரதமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர் !” - மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதிலடி !

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட். இது குறித்து அவர் பேசியதாவது, "பிரதமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். அவருக்கு தவறான செய்திகளை கூறுகின்றனர். ஜனநாயக நாட்டில் பிரதமர் மோடி நேற்று பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. ஒருவேளை ராஜஸ்தானின் சூழலை கண்டு அவர் பதற்றத்தில் அப்படி கூறினாரா என்றும் தெரியவில்லை. பாஜகவினர் தான் கன்ஹையா லாலை கொலை செய்தனர்.

அந்த வழக்கில் நாங்கள் குற்றம்சாட்டப்பட்டவரை 2 மணி நேரத்தில் நாங்கள் பிடித்தோம். ஆனால் அன்று இரவே அவரை பாஜகவை சேர்ந்தவர்கள் தான் ஜாமினில் எடுத்தனர். அதோடு இந்த வழக்கை உடனடியாக NIA தங்கள் வசம் எடுத்துக் கொண்டது. தற்போதும் இந்த வழக்கை NIA விசாரிக்கிறது. இப்போது இதன் விவரங்களை NIA தெரிவிக்க வேண்டும். மோடி இவ்வாறு பேசுவதை தவிர்க்க வேண்டும்." என்றார்.

banner

Related Stories

Related Stories