அரசியல்

"நாங்கள் சாதித்ததை இந்தியாவே பேசுகிறது" - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நிதிஷ் குமார் பெருமிதம் !

நாங்கள் சாதித்ததை இந்தியாவே பேசுகிறது என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

"நாங்கள் சாதித்ததை இந்தியாவே பேசுகிறது" - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து  நிதிஷ் குமார் பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்தியது. அதன் முடிவுகள் த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.0148 %) பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (EBC) சேர்ந்தவர்கள். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.1286 %) பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர்கள். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.6518 %) பேர் பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர்கள்

21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.6824 %) பேர் பழங்குடியினத்தைச் (ST) சேர்ந்தவர்கள். 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.5224 %) பேர் பொது பிரிவினர். இந்துக்களின் மக்கள் தொகை 81.99 சதவீதமும், முஸ்லிம் மக்கள் தொகை 17.70 சதவீதம் என்பதும் தெரியவந்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நாங்கள் சாதித்ததை இந்தியாவே பேசுகிறது" - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து  நிதிஷ் குமார் பெருமிதம் !

இந்த முடிவுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவோம் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில், பீகார் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாங்கள் சாதித்ததை இந்தியாவே பேசுகிறது என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " நாங்கள் வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சாதித்தது என்ன என்பது குறித்து நாடே பேசுகிறது. இப்போது சாதிவாரி எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்கியுள்ளோம். அடுத்ததாக குடும்பங்களின் பொருளாதார நிலை குறித்து விவரங்களைப் சேகரித்துள்ளோம். இது அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories