அரசியல்

சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. வெளியான 2 கருத்து கணிப்பு முடிவுகள்.. அதிர்ச்சியில் பாஜக மேலிடம்!

சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் குறித்து வெளியான இரு கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. வெளியான 2 கருத்து கணிப்பு முடிவுகள்.. அதிர்ச்சியில் பாஜக மேலிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.

கர்நாடகாவில் பாஜக அடைந்த தோல்வியும் அங்கு காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட வெற்றியும் பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் சார்பில் கூறப்பட்டது. அதற்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநில்ங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

இந்த நிலையில், விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 68 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. வெளியான 2 கருத்து கணிப்பு முடிவுகள்.. அதிர்ச்சியில் பாஜக மேலிடம்!

அங்கு சட்டமன்றத்தின் காலம் முடிவடையவுள்ள நிலையில், விரைவில் அங்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் குறித்து டிபி லைவ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 48-60 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக 28-40 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல, ஐஏஎன்எஸ் நிறுவனம் நடத்திய மற்றொரு கருத்துக் கணிப்பில், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 27 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படி இரு கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories