மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.
இந்த வன்முறையில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்களால் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு சில மாதங்களுக்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கியது.
அதோடு சம்பவம் நடைபெற்று 4 மாதம் ஆகியும் அங்கு கலவரம் நிற்காமல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு 16 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி கேப்டன் ங்காம்கோகு மேட் என்ற இளம்வீரரின் வீடும் மணிப்பூர் கலவரத்தில் எரிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து ( SAFF) போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியின் கேப்டனாக மணிப்பூரை சேர்ந்த ங்காம்கோகு மேட் (Ngamgouhou Mate) என்பவர் செயல்பட்டு வந்தார். என்னைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்" என்று கூறியுள்ளார்.
தெற்காசிய கால்பந்து ( SAFF) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 6 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் மொத்தமுள்ள 23 பேரில் 15 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்பதும் இதில், பலர் இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.