அரசியல்

முடிவுக்கு வந்த ஜி-20 மாநாடு.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன? அடுத்த தலைமைப் பொறுப்பு யாருக்கு?

டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முடிவுக்கு வந்த ஜி-20 மாநாடு.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன? அடுத்த தலைமைப் பொறுப்பு யாருக்கு?
-
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு, கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் நேற்று மற்றும் இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதே நேரம் ரஷ்யா அதிபர் புதின், சீனா அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் கலந்துகொள்ளாமல் தங்கள் பிரநிதிகளை அனுப்பி வைத்தனர்.

இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் அனைவரின் ஒப்புதலோடு ஆப்ரிக்க கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக ஜி-20 கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ஜி-20 கூட்டமைப்பின் பெயர் ஜி-21 கூட்டமைப்பு என பெயர்மாற்றம் பெற்றுள்ளது.

modi and brazil president silva
modi and brazil president silva

இது தவிர இந்த மாநாட்டில் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் பொருளாதார வழித்தடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.இந்த பொருளாதார வழித்தடத் திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு நாடுகள், சௌதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ரயில் மற்றும் கப்பல் வாயிலாக இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதோடு காலநிலை மாற்றம் குறித்தும் முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் -ரஷ்யா போரில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விதமான பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு முக்கியமான பல முடிவுகள் இந்த ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு இன்றோடு முடிவுக்கு வந்த நிலையில், அடுத்தாண்டு ஜி21 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள பிரேசில் நாட்டு அதிபர் லூயிஸ் சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் வரும் நவம்பர் மாதம்வரை இந்த ஜி21 தலைமை பொறுப்பு இந்தியாவிடமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories