அரசியல்

தினமலரின் தரம் கெட்ட செயலுக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும்.. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கண்டனம் !

காலை உணவுத் திட்டம் குறித்த தினமலரின் விமர்சனத்துக்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமலரின் தரம் கெட்ட செயலுக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும்.. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழில் அநாகரீகமான செய்தி வெளிவந்திருந்தது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். மேலும், பொதுமக்களும் கொதித்தெழுந்து தினமலரின் விளம்பரங்களை அழித்தனர்.

இந்த நிலையில், தினமலரின் இந்த செயலை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமலர் நாளிதழுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் கண்டன அறிக்கை :

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் நடக்கும் சமுதாய நிகழ்வுகளை இணையம் மூலம் தொடர்ந்து நோக்குதல் தமிழர்களுக்கு அன்றாட நடவடிக்கை என்றால் அது மிகை அல்ல. அவ்வாறு ஆகஸ்ட் 31 தமிழ்நாட்டில் ஒருதலைப் பட்டச்சமாக செயல்படும் ஒரு நாளிதழ் செய்த செயல் மிகவும் அருவருக்க மற்றும் கண்டிக்கத் தக்க செயலாயிற்று.

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் பாராட்டுத்தக்கத் திட்டமான காலை உணவு திட்டத்தால், மாணவர்கள் பசி இன்றி ஊட்டச்சத்துள்ள உணவை கிடைக்க செய்து, குறிப்பாக மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து உணவு உண்டுவிட்டு, கல்வி கற்பது என்பது தமிழ் சமுதாயத்திற்கே பெருமை சேர்க்கும் விதமான இந்த திட்டத்தை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் கட்சிக்கு அப்பாற்ப்பட்டு மனதார பாராட்டி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட திட்டத்தை தமிழ்நாட்டிற்கு அருகே உள்ள மாநிலம் தெலுங்கானா அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து, அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை கேட்டு அறிந்து, அதனை தங்கள் மாநிலத்தில் எப்படி செயல் படுத்துவது என்பதை கேட்டு அறிந்து சென்று இருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை.

தினமலரின் தரம் கெட்ட செயலுக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும்.. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கண்டனம் !

இப்படி உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மனதார பாராட்டிக்கொண்டு இருக்கும் வேலையில், தமிழ்நாட்டில் உள்ள தினமலர் பத்திரிக்கை, ஊடக தர்மத்தை மறந்து, "காலை உணவு திட்டத்தை" கொச்சைப் படுத்தும் விதமாக தலைப்பு செய்தி இட்டு இருப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள், அவர்களின் குடும்பங்களை இழிவு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு இருப்பது மிக தவறான செயல். இதற்கு "தினமலர் - சேலம்" பதிப்பு ஆசிரியர் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தினமலரின் தரம் கெட்ட செயலுக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும்.. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கண்டனம் !

தமிழ்நாடு அரசிடம் மன்னிப்பு என்பதை விட, தமிழ்நாட்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும், பெற்றோர்களிடம் தார்மீக அடிப்படையில் மன்னிப்பு கேட்க வேண்டும் அதுவே அறம்!

தினமலரின் இந்த தரம் கெட்ட செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு அமைச்சர்களும், உலகெங்கும் இருக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத் தக்கது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் "தினமலர்" நாளிதழுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

banner

Related Stories

Related Stories