அரசியல்

"ஆளுநரின் வேலை தபால்காரர் வேலை மட்டுமே".. தயாநிதி மாறன் எம்.பி கடும் விமர்சனம்!

ஆளுநரின் வேலை என்பது தபால்காரர் வேலைதான் என தயாநிதி மாறன் எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

"ஆளுநரின் வேலை தபால்காரர் வேலை மட்டுமே".. தயாநிதி மாறன் எம்.பி கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் எம்.பி, "சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு வார்டுகளில் கழிவுநீர் குழாய்கள் கட்டுமான பணிகளுக்காக ரூ.52 கோடி ரூபாய் செலவில் 30 கிலோமீட்டர் நீளத்திற்குக் கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணியை இன்று தொடங்கியுள்ளோம்.

நீட் தேர்வையும் ஒன்றிய அரசையும் கண்டித்து நடத்திய போராட்டத்தைத் தவறாய் பேசிக் கொண்டு வருகிறார் ஜெயக்குமார். இது அவரது விரக்தியைக் காட்டுகிறது. அவர் எந்த சாதனை செய்தார்? இதுவரைக்கும் எதுவும் செய்யவில்லை. அவரது மகனும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவரும் எதுவும் செய்யவில்லை.

"ஆளுநரின் வேலை தபால்காரர் வேலை மட்டுமே".. தயாநிதி மாறன் எம்.பி கடும் விமர்சனம்!

ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து நிற்கும் ஒரே தைரியம் கொண்ட தலைவராகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் யாரைப் பிரதமராகக் காட்டுகிறாரோ அவர் கண்டிப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பார்.

தமிழ்நாட்டு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஒரு தலைவரா?. மக்கள் பிரச்சனைகளைத் திசை திருப்பும் வகையில் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது அதிகாரங்களின் எல்லைகளை மீறிச் செயல்படுகிறார். இதைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆளுநரின் வேலை என்பது ஒரு தபால்காரர் வேலைதான். ஆனால் தேவை இல்லாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories