அரசியல்

நாங்கள் வந்தால்தான் மரியாதை.. இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்து ரத்து.. ஆளுநரை சாடிய KS அழகிரி !

எங்கள் கூட்டணி சென்று டீ குடித்தால்தான் அவருக்கே சந்தோஷம், மரியாதை. அதனால் தான் இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்தை ரத்து செய்திருக்கிறார் ஆளுநர் என கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

நாங்கள் வந்தால்தான் மரியாதை.. இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்து ரத்து.. ஆளுநரை சாடிய KS அழகிரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தந்த மாநிலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் சார்பில், மாநில ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து வைக்கப்படுகிறது. இந்த விருந்தில் அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று சிறப்பிப்பர்.

அந்த வகையில் இந்த ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அனுசரிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் இது நிகழ இருந்தது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

நாங்கள் வந்தால்தான் மரியாதை.. இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்து ரத்து.. ஆளுநரை சாடிய KS அழகிரி !

இதனிடையே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தினார் ஆளுநர். அப்போது அதில் இருக்கும் மாணவர் ஒருவரின் பெற்றோர் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது 'நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவில் நான் கையெழுத்திட மாட்டேன்' என்று கூறினார்.

நாங்கள் வந்தால்தான் மரியாதை.. இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்து ரத்து.. ஆளுநரை சாடிய KS அழகிரி !

இதற்கு மாநிலம் முழுவதும் இருந்து ஆளுநருக்கு கண்டனங்கள் எழுந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்து 2 நாட்களுக்குள் குரோம்பேட்டையில் நீட் தேர்வு காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். மகனின் பிரிவை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கிய நிலையில், ஆளுநர், ஒன்றிய அரசுக்கு மாநிலம் முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்தது.

தொடர்ந்து இது போன்ற மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வரும் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்தார். இந்த சூழலில் வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்த நிலையில், தேநீர் விருந்தை ஒத்தி வைப்பதாக நேற்று ஆளுநர் மாளிகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

நாங்கள் வந்தால்தான் மரியாதை.. இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்து ரத்து.. ஆளுநரை சாடிய KS அழகிரி !

இந்த நிலையில் இன்று மழையே பெய்யாமல் சென்னை முழுவதும் சூரியன் சுட்டெரிக்கும் நிலையில், ஆளுநர் மழையை காரணம் காட்டி தேநீர் விருந்தை ஒத்தி வைத்துள்ள சம்பவம் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, "“அண்ணாமலை, இ.பி.ஸ்-க்கு மட்டும் தேநீர் விருந்து வைக்க ஆளுநருக்கு விருப்பம் இல்லை. எங்கள் கூட்டணி சென்று டீ குடித்தால்தான் அவருக்கே சந்தோஷம், மரியாதை. அதனால் தான் இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்தை ரத்து செய்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!” என்று விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories