அரசியல்

உயிர் பலி வாங்கும் நீட்: “ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா?” - தி.க. தலைவர் கீ.வீரமணி தாக்கு!

நீட்’ தேர்வினால், இன்னும் எத்தனை எத்தனை உயிர்ப் பலிகள் ஏற்படுமோ? மாணவர்களே தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து துணிவுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள் என தி.க. தலைவர் கீ.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உயிர் பலி வாங்கும் நீட்: “ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா?” - தி.க. தலைவர் கீ.வீரமணி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிக்கும் எண்ணத்தில் நீட் தேர்வை எதிர்கொண்ட நிலையில் இரண்டு முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலிலிருந்த ஜெகதீஸ்வரன், நேற்றைய முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மகனின் பிரிவை தாங்க முடியாமல் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வ சேகர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது மகனின் இறப்புக்கு நீட் தேர்வு தான் காரணம் என்று பேட்டியளித்திருந்த அவர், மனைவியைப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

உயிர் பலி வாங்கும் நீட்: “ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா?” - தி.க. தலைவர் கீ.வீரமணி தாக்கு!

இந்த சூழலில் மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து ஒன்றிய அரசுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இது போன்ற மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வரும் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். தொடர்ந்து நீட் தேர்வால் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்று ஒன்றிய அரசுக்கு பொதுமக்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

உயிர் பலி வாங்கும் நீட்: “ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா?” - தி.க. தலைவர் கீ.வீரமணி தாக்கு!

இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின் வருமாறு : "சென்னை குரோம்பேட்டையில் மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வாழ்வை முடித்துள்ள சோகம். ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா? ‘நீட்’ தேர்வு ரத்துக்கு நான் கையெழுத்திட மாட்டேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று முன்தினம் (12.8.2023) சம்மன் இல்லாது ஆஜரானதுபோல் கூறியிருந்தார்.

உயிர் பலி வாங்கும் நீட்: “ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா?” - தி.க. தலைவர் கீ.வீரமணி தாக்கு!

இவருக்கு இல்லாத அதிகாரத்தை, பொல்லாத எண்ணத்துடன் இப்படி உளறியுள்ளார். இந்த உயிர்ப் பலிகளுக்கு யார் பொறுப்பேற்பது? மனிதத்தை மதிக்காத ‘மனிதர்’களாக இப்படி மமதையுடன் பேசுவதனால் யாருக்கு என்ன பயன்?

மகனையும், தந்தையையும் இணைந்து குடும்பம் குடும்பமாக பலி கேட்கும் ‘நீட்’ தேர்வினால், இன்னும் எத்தனை எத்தனை உயிர்ப் பலிகள் ஏற்படுமோ? மாணவர்களே தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து துணிவுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள்! மக்களே உணருங்கள்.!" என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிர் பலி வாங்கும் நீட்: “ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா?” - தி.க. தலைவர் கீ.வீரமணி தாக்கு!

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories