அரசியல்

பிரிஜ் பூஷன் மற்றும் ராகுல் காந்தி.. ஒரே நாளில் அம்பலமான பாஜக பெண் எம்.பி-க்களின் இரட்டை வேடம் !

பாஜக எம்.பி-க்கு என்றால் ஒரு நியாயம், அதே பிறர் என்றால் ஒரு நியாயமா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

பிரிஜ் பூஷன் மற்றும் ராகுல் காந்தி.. ஒரே நாளில் அம்பலமான பாஜக பெண் எம்.பி-க்களின் இரட்டை வேடம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிஜ் பூஷன் மற்றும் ராகுல் காந்தி.. ஒரே நாளில் அம்பலமான பாஜக பெண் எம்.பி-க்களின் இரட்டை வேடம் !

அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அவர் மீதான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பிரிஜ் பூஷன் மற்றும் ராகுல் காந்தி.. ஒரே நாளில் அம்பலமான பாஜக பெண் எம்.பி-க்களின் இரட்டை வேடம் !

அப்போது அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலியல் நோக்கமின்றி கட்டிப்பிடிப்பது குற்றமல்ல என நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி 'Flying Kiss' கொடுத்ததாக பாஜக எம்.பி ஸ்ம்ரிதி இரானி மற்றும் பாஜக பெண் எம்.பிக்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த இரண்டு சம்பவங்களையும் குறிப்பிட்டு பாஜக எம்.பி-க்கு என்றால் ஒரு நியாயம், அதே பிறர் என்றால் ஒரு நியாயமா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், மணிப்பூரில் கொடூரமான வன்கொடுமை நிகழ்வு நடந்தபோது பாஜக பெண் எம்.பி-க்கள் அனைவரும் வாயை மூடி மெளனமாக இருந்ததையும் குறிப்பிட்டு அவர்களை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories