அரசியல்

”முட்டாள்தனமான நடவடிக்கை; ஆனால் மகிழ்ச்சி”.. ஒன்றிய அரசை கிண்டல் அடித்த ப.சிதம்பரம்!

கருப்பு பணத்தை பதுக்கி வைக்க மட்டுமே ரூ.2000 நோட்டு உதவியுள்ளது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

”முட்டாள்தனமான நடவடிக்கை; ஆனால் மகிழ்ச்சி”..  ஒன்றிய அரசை கிண்டல் அடித்த ப.சிதம்பரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2016-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதாக கூறி, இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி, தங்களிடம் இருந்த பணத்தை ஏடிஎம்., வங்கி என வரிசையாக நின்று, சாப்பிடாமல் கூட மாற்றிக்கொண்டனர். இந்த நிகழ்வால் பொதுமக்கள் பலவகையில் துன்பங்களை அனுபவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக புது ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது.

அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்ககளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் ரூ.2000 நோட்டுகள் இனிமேல் புதிதாக புழக்கத்துக்கு வராது என்றும், ஏற்கெனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட நோட்டுகள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

”முட்டாள்தனமான நடவடிக்கை; ஆனால் மகிழ்ச்சி”..  ஒன்றிய அரசை கிண்டல் அடித்த ப.சிதம்பரம்!

அதேபோல், ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த ஆணவமும், படிவமும், அடையாள அட்டையும் தேவையில்லை என வங்கிகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் கருப்புப்பணத்தை ரூ.2000 நோட்டாக பதுக்கி வைத்திருப்போருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பதாக இந்த அறிவிப்பு உள்ளது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அடையாளமும், படிவங்களும், சான்றுகளும் தேவையில்லை என்று வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன.

கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவே 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்ற பா.ஜ.க.வின் சுழல் முறியடிக்கப்பட்டது. சாதாரண மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் இல்லை. 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டனர். தினசரி சில்லறை பரிமாற்றத்திற்கு அவை பயனற்றவை.

அப்படியென்றால், ரூ.2000 நோட்டுகளை வைத்துக்கொண்டு பயன்படுத்தியது யார்? உங்களுக்கு பதில் தெரியும். 2000 ரூபாய் நோட்டு கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தங்கள் பணத்தை எளிதில் பதுக்கி வைக்க உதவியது. 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. கறுப்புப் பணத்தை வேரறுக்கும் அரசின் குறிக்கோளுக்கு இவ்வளவுதான் காரணம்

2000 ரூபாய் நோட்டு 2016-ல் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை. குறைந்தது 7 ஆண்டுகளுக்குப் பிறகு முட்டாள்தனமான நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories