அரசியல்

அதானிக்காக நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன செபி, நிர்மலா சீதாராமன்.. -உச்சநீதிமன்றம் மூலம் வெளிவந்த உண்மை !

அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் செபி அமைப்பு மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறியது அம்பலமாகியுள்ளது.

அதானிக்காக நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன செபி, நிர்மலா சீதாராமன்.. -உச்சநீதிமன்றம் மூலம் வெளிவந்த உண்மை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 24-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதானிக்காக நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன செபி, நிர்மலா சீதாராமன்.. -உச்சநீதிமன்றம் மூலம் வெளிவந்த உண்மை !

அதானி நிறுவன பங்குகளின் இந்த சரிவு காரணமாக அதில் முதலீடு செய்திருந்த LIC, உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.அதானியின் நிறுவனங்களில் LIC நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 24 ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது வரை அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்து வருவதால் தற்போது இதன் மதிப்பு ரூ.26,861.88 கோடியாக சரிந்துள்ளது.

இதனிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியின் முறைகேடுகள் மற்றும் பித்தலாட்டங்களை மட்டும் வெளியே விடாமல் அதன் முறைகேடுகளை தடுக்காமல் மௌனமாக இருந்த பங்குசந்தையை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செபி அமைப்பு குறித்தும் கேள்வி எழுதியது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தபோது அதானி விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக செபி அமைப்பு சார்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதே பதிலை தான் அளித்திருந்தார்.

அதானிக்காக நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன செபி, நிர்மலா சீதாராமன்.. -உச்சநீதிமன்றம் மூலம் வெளிவந்த உண்மை !

ஆனால், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அதானியின் நிறுவனங்கள் குறித்து செபி இதுவரை விசாரணை நடத்தவில்லை என்று கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலாம் நாடாளுமன்றத்தில் செபி அமைப்பு பொய் கூறியது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் விமர்சித்திருந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் அதானி நிறுவனம் மீது விசாரணை நடத்தியதாக கூறிய செபி, உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள பதிலில் விசாரணை நடத்தவில்லை என்று கூறியுள்ளதாகவும அதானி நிறுவனத்தை காப்பாற்ற செபி முயல்கிறது என்று வழக்கறிஜர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories