அரசியல்

சன்னி லியோனின் காரை பிரதமர் மோடியின் கார் என கூறி பகிர்ந்த பாஜகவினர்.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !

நடிகை சன்னி லியோனை காணகுவிந்த கூட்டத்தை பிரதமர் மோடியை பார்க்க திரண்ட கூட்டம் என பாஜகவினர் பொய் பரப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சன்னி லியோனின் காரை பிரதமர் மோடியின் கார் என கூறி பகிர்ந்த பாஜகவினர்.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரளாவில் நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோவை தொடங்கி வைப்பதற்காகவும் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளா வந்திருந்தார். அங்கு கொச்சியின் சாலைகளில் கூடியிருந்த மக்களை நோக்கி அவர் கையசைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் டெல்லி திரும்பிய நிலையில், அவர் கொச்சியில் மக்களை சந்தித்தபோது திரண்டிருந்த கூட்டம் என்று ஒரு புகைப்படத்தை கேரள பாஜகவினர் இணையத்தில் பரவவிட்டனர். இந்த புகைப்படத்தை பல்வேறு மாநிலங்களின் பாஜக பிரமுகர்களும் பகிர்ந்திருந்தனர்.

அதில் பெரும்பாலான பாஜகவினர் கேரளத்தில் மோடிக்கு பொதுமக்கள் பிரமாண்டமான வரவேற்பை அளித்ததாகவும், மோடியை பார்க்க பொதுமக்கள் அதிகம் திரண்டதால் கேரளத்திலும் விரைவில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், மோடியை பார்க்க பொதுமக்கள் குவிந்ததாக வெளியான புகைப்படம் தவறானது என்றும், அந்த கூட்டம் உண்மையில் நடிகை சன்னி லியோனை காணகுவிந்த கூட்டம் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு பாஜகவினரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சன்னி லியோனின் காரை பிரதமர் மோடியின் கார் என கூறி பகிர்ந்த பாஜகவினர்.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !

கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சன்னி லியோன் கொச்சியில் ஒரு மொபைல் ஸ்டோரை திறப்பதற்காக வருகை தந்துள்ளார். அப்போது அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த புகைப்படத்தையே தற்போது பாஜகவினர் மோடியை பார்க்க திரண்ட கூட்டம் என வதந்தி பரப்பு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories